Latest Videos

மீண்டும் கள்ளச்சாராய மரணம்.. கும்பகர்ண தூக்கத்தில் இருந்து எப்போது விழிப்பீர்கள்- ஸ்டாலினை விளாசும் எடப்பாடி

By Ajmal KhanFirst Published Jul 4, 2024, 2:10 PM IST
Highlights

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் கண்ட  பிறகும் எந்த பாடமும் நீங்கள் கற்றுக்கொள்ளவில்லையா திரு. ஸ்டாலின் அவர்களே? உங்கள் விடியா அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பதற்குள் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோவது?  என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மீண்டும் கள்ளச்சாராய மரணம்.?

கள்ளக்குற்சி விஷச்சாரயம் அருந்தி 65 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பாராளுமன்றத்திலும் பிரச்சனை எழுத்தது. முன்னதாக தமிழக அரசு சார்பாக கள்ளச்சாராயத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் ஆயுள்தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழ்நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவம் மக்கள் மத்தியில் இருந்து மறைவதற்க்குள் மீண்டும் ஒரு கள்ளச்சாராய மரணம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெந்நல்லூர் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 3 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

ADMK : நீலகிரி தொகுதி முன்னாள் அதிமுக எம்பி திடீர் மரணம்.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி

விழுப்புரத்தில் 3 பேர் பாதிப்பு

இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் சுவடு மறைவதற்குள் மற்றுமொரு கள்ளச்சாராய மரணம் நடைபெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன. சம்மந்தப்பட்ட இடத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்ட காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்டு, அதிமுக ஐடி விங் சார்பில் சுட்டிக்காட்டிய பிறகும், 

கும்பகர்ண தூக்கம்

இந்த விடியா திமுக அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவாகவே இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.  விழுப்புரம் மாவட்டம் மரக்காணமும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரமும் கண்ட பிறகும் எந்த பாடமும் நீங்கள் கற்றுக்கொள்ளவில்லையா திரு. ஸ்டாலின் அவர்களே? உங்கள் விடியா அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பதற்குள் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோவது?  கள்ளச்சாராய மரணங்கள் தொடர்ந்து விழுப்புரம் சரகத்தில் நடைபெறுவதற்கு காரணமான நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

ஸ்கெட்ச் போட்டு எங்க கட்சிக்காரரை வெட்டி கொன்னுட்டாங்க! யாருக்கும் பாதுகாப்பு இல்லை! இபிஎஸ் சொன்ன பகீர் தகவல்!
 

click me!