பாஜகவின் வெற்றியை கொண்டாட தயாராகுங்கள்.! ஜூன் 4க்கு பிறகு வடக்கு, தெற்கு என்ற பேச்சு இருக்காது-அண்ணாமலை அதிரடி

By Ajmal Khan  |  First Published May 27, 2024, 11:47 AM IST

ஜூன் 4ஆம் தேதி பாஜகவின் வெற்றியைக் கொண்டாடத் தயாராக இருங்கள். தாமரை படர்ந்திருக்கும் காட்சியை ஜூன் 4க்குப் பின் அனைவரும் பார்ப்பார்கள் என அண்ணாமலை தெரிவித்தார். 
 


ஆட்சியை கைப்பற்றப்போவது யார்.?

இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது இந்த தேர்தல் ஆனது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது தற்போது வரை ஆறு கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் ஏழாம் கட்ட தேர்தல் ஆனது ஜூன் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது இதனைத் தொடர்ந்து ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் ஆட்சியை பாஜக மீண்டும் பிடிக்குமா அல்லது பாஜகவை வீழ்த்தி இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் வட மாநிலங்களில் பாஜகவிற்கு பெரிய அளவு ஆதரவு இருந்த இருப்பதாகவும், தென் மாநிலங்களைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

வெற்றியை கொண்டாட தயாராகுங்கள்

இந்த சூழ்நிலையில்  வாக்கு எண்ணிக்கை ஒரு வார காலமே உள்ள நிலையில் தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவரின் ஆலோசனைக் கூட்டம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட பாஜகவிற்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வாக்கு எண்ணிக்கையின் போது பூத் முகவர்கள் செயல்படும் முறை குறித்து ஆலோசனை வழங்கினார். ஜூன் 4ஆம் தேதி பாஜகவின் வெற்றியைக் கொண்டாடத் தயாராக இருங்கள். தாமரை படர்ந்திருக்கும் காட்சியை ஜூன் 4க்குப் பின் அனைவரும் பார்ப்பார்கள் என தெரிவித்தார். ஜூன் 4ஆம் தேதிக்குப் பின் வடக்கு, தெற்கு என்ற பேச்சு இருக்காது என அண்ணாமலை கூறினார். 

தென்னிந்தியாவில் இந்த முறை அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை நாம் பெற இருக்கிறோம், டெல்லியில் பாஜக இந்த முறை 60% வாக்குகள் பெறும், 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும், அது காலத்தின் கட்டாயம் என கூறியவர், டெல்லி, குஜராத் போன்ற இடங்களில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெல்லும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார். 

Annamalai : ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் தோல்வி.. நேரில் பார்த்து ரசித்த அண்ணாமலை

click me!