சபரிமலையில் அடிப்படை வசதி கூட செய்யாத கம்யூனிஸ்ட் அரசு... வேண்டுமென்றே பக்தர்களை சிரமப்படுத்துகிறது- அண்ணாமலை

By Ajmal Khan  |  First Published Dec 27, 2023, 8:16 AM IST

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தி, முறையான வரிசையில் வழிபட அனுமதிக்காமல், வேண்டுமென்றே பக்தர்களைச் சிரமத்திற்குள்ளாக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் இந்தப் போக்கு கவலைக்குரியது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 


சபரிமலை கூட்ட நெரிசல்

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவடைவதையொட்டி பக்தர்கள் ஒரே நாளில் ஒரு லட்சத்து 63 ஆயிரம் பேர் சபரிமலைக்கு வந்துள்ளனர். சபரிமலையில் பம்பையில் இருந்து சன்னிதானம் பெரிய நடை பந்தல் வருவதற்கு 15 மணி நேரம் வரை கியூவில் நிற்க வேண்டிய நிலை உள்ளது.

Latest Videos

மேலும் கிறிஸ்மஸ் விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டமும்நேற்றையி தினம் மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக பக்தர்கள் சிரமப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், சபரிமலை ஐயப்பன் கோவிலில், போதுமான முன்னேற்பாடுகள் செய்யாமல் வழிபடச் செல்லும் பக்தர்களை வெகு நேரம் காத்திருக்க வைப்பதோடு, 

பக்தர்கள் அவதி

அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட, அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்காமல் புறக்கணித்து வருகிறது கேரள கம்யூனிஸ்ட் அரசு.  கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தி, முறையான வரிசையில் வழிபட அனுமதிக்காமல், வேண்டுமென்றே பக்தர்களைச் சிரமத்திற்குள்ளாக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் இந்தப் போக்கு கவலைக்குரியது. சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் அதிகம்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்ற நிலையில், தமிழக அரசும் இதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.  உடனடியாக, முதலமைச்சர் ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சரிடம் பேசி, தமிழக பக்தர்களுக்கான பாதுகாப்பையும், அடிப்படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இதையும் படியுங்கள்

வேகமெடுக்கும் JN.1 வகை கொரொனா.. இனி இதை எல்லாம் ஃபாலோ பண்ணனும்.. கர்நாடக அரசு புதிய உத்தரவு..

click me!