சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. 30 பேருக்கு மூச்சுத்திணறல்.! அலறியடித்து வெளியேறிய பொதுமக்கள்.!

By vinoth kumar  |  First Published Dec 27, 2023, 7:26 AM IST

சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உரத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. 


சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இருந்து திடீரென அமோனியம் வாயு வெளியேறியதால்  அப்பகுதி மக்கள் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உரத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு கடற்கரையில் இருந்து 2 முதல் 3 கி.மீ. தொலைவில் கப்பல்களிலிருந்து திரவ அம்மோனியா கடலுக்கடியில் பதிக்கப்பட்ட குழாய் மூலமாக வருகிறது. இந்த குழாயில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக பெரியகுப்பம் பகுதிகளில் பொதுமக்களுக்கு திடீரென கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

இந்த ரசாயன வாயு கசிவால் அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பீதி அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் இருந்து வெளியேறினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

click me!