தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Published : Dec 26, 2023, 10:23 PM ISTUpdated : Dec 26, 2023, 10:28 PM IST
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

சுருக்கம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே சமீபத்தில் 21 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், மறுபடியும் மருத்துவனையில் அனுமதிகப்பட்டிருக்கிறார்.

தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாக அரசியல் களத்தில் அதிகம் தோன்றாமல் ஓய்வில் இருந்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டது.

இதனால், கடந்த நவம்பர் 18ஆம் தேதி சென்னையில் கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

21 நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் உடல்நலம் தேறிய விஜயகாந்த் டிசம்பர் 11ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். இந்நிலையில், மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

700 ரூபாய்க்கு கார் ஆர்டர் செய்த சின்னப் பையன்! வைரலான ஆனந்த் மஹிந்திரா ரியாக்‌சன்!

PREV
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!