திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடியும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருக்கும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவருடன் கலந்துகொள்ள இருக்கிறார்.
மாணவர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது. இதன் மூலம் படிப்பை முடித்துவிட்டு, மூன்று ஆண்டுகளாக பட்டம் பெறுவதற்காகக் காத்திருந்த மாணவர்களுக்கு இந்தப் பட்டமளிப்பு விழாவில் பட்டங்கள் வழங்கப்பட உள்ளன.
undefined
அப்பவே காந்தி சொன்னார்... வெள்ள நிவாரணப் பணிகளில் உதவிய மக்களுக்கு முதல்வர் பாராட்டு
நவம்பர் 2022 க்கு முன் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் நவம்பர் 2022 மற்றும் ஏப்ரல் 2023 வரையான காலத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இந்தப் பட்டமளிப்பு விழாவில் பட்டம் வழங்கப்படும்.
இளநிலை, முதுநிலை, ஆய்வில் நிறைஞர், பட்டயம், பட்ட சான்றிதழ் படிப்புகளை முடித்த தகுதியான மாணவர்களுக்கு இந்தப் பட்டமளிப்பு விழாவில் பட்டங்கள் வழங்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் கூறினார். அதைத் தொடர்ந்து பட்டமளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஜனவரி 2ஆம் தேதி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இருவரும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் திடீர் கைது