‘என் மண் என் மக்கள்’: அண்ணாமலையின் முதற்கட்ட யாத்திரை நிறைவு; செப்.3இல் 2ஆம் கட்டம்!

By Manikanda Prabu  |  First Published Aug 22, 2023, 7:46 PM IST

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் முதற்கட்டம் நிறைவடைந்துள்ளது


ஊழலுக்கு எதிராகவும், மோடியை 3ஆவது முறையாக பிரதமராக்க தமிழக மக்களின் ஆதரவை பெறும் நோக்கத்திலும், ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டுள்ளார். அண்ணாமலையின் யாத்திரையை கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.

மொத்தம் 5 கட்டங்களாக 168 நாட்கள் யாத்திரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி தொடங்கிய முதற்கட்ட யாத்திரை ஆகஸ்ட் 22ஆம் தேதி (இன்று) நிறைவடைந்துள்ளது. திருநெல்வேலியில் இன்றுடன் நிறைவு பெற்ற அண்ணாமலையின் நடைபயணத்தில் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் கலந்து கொண்டார்.

Tap to resize

Latest Videos

பிரிக்ஸ் மாநாடு: தென் ஆப்பிரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடி!

அதன் தொடர்ச்சியாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் இரண்டாம் கட்டம் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி துவங்க உள்ளது. இரண்டாம் கட்ட யாத்திரையானது தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு செல்லவுள்ளது. கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியில் வருகிற செப்டம்பர் மாதம் 27ஆம் தேதியுடன் இரண்டாம் கட்ட யாத்திரை நிறைவடைகிறது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை செல்லவுள்ளது. கால்நடையாகவும், மக்கள் வசிக்காத பகுதிகளில் வாகன யாத்திரையும் நடைபெற்று வருகிறது. 1700 கிலோ மீட்டர் கால்நடையாகவும், 900 கிலோ மீட்டர் வாகனத்திலும் யாத்திரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரையானது சென்னையில் நிறைவடையவுள்ளது. ஜனவரி 11ஆம் தேதிக்குள் யாத்திரையை முடிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.

click me!