முதலமைச்சர் பொறுப்பில் நீடிக்க தார்மீக உரிமை இருக்கிறதா.? ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யனும்- விளாசும் அண்ணாமலை

By Ajmal KhanFirst Published Jul 28, 2024, 1:06 PM IST
Highlights

காவல்துறையை ஏவல் துறையாக்கி, ஒரு குடும்பத்தின் நலனுக்காக, ஒட்டுமொத்த மாநில மக்களும் உயிரைப் பணயம் வைத்திருக்கும் அவல நிலை, வரலாற்றிலேயே நிகழ்ந்ததில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 

தொடரும் கொலை- அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

தமிழகத்தில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஒரு நாளில் மட்டும் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடலூரில் அதிமுக வார்டு செயலாளர், கன்னியாகுமரியில் காங்கிரஸ் கவுன்சிலர் கணவர், சிவகங்கையில் பாஜக நிர்வாகி என தொடர் கொலை சம்பவத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தநிலையில் 

சிவகங்கை கூட்டுறவு பிரிவு மாவட்டச் செயலாளர் சகோதரர் திரு.செல்வகுமார் அவர்கள், நேற்று இரவு, சமூக விரோதிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்… pic.twitter.com/MKs6ijnaoy

— K.Annamalai (@annamalai_k)

Latest Videos

 

 தமிழக பாஜக தலைவர் அண்ணமாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை  கூட்டுறவு பிரிவு மாவட்டச் செயலாளர் செல்வகுமார்  நேற்று இரவு, சமூக விரோதிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான நேரத்தில்,  தமிழக பாஜக அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.

Sivagangai Murder News: பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு!

முதலமைச்சர் பதவி- தார்மீக உரிமை உள்ளதா.?

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் கொலைகளின் தலைநகரம் ஆகிவிட்டது. அரசு குறித்தோ, காவல்துறை குறித்தோ, சமூக விரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரோ, நாளொரு அரசியல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார். 

காவல்துறையை ஏவல் துறையாக்கி, ஒரு குடும்பத்தின் நலனுக்காக, ஒட்டுமொத்த மாநில மக்களும் உயிரைப் பணயம் வைத்திருக்கும் அவல நிலை, வரலாற்றிலேயே நிகழ்ந்ததில்லை. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றவியலாத கையாலாகாத்தனத்தைத் தொடரும் திரு. ஸ்டாலின், தனக்கு முதலமைச்சர் பொறுப்பில் நீடிக்கும் தார்மீக உரிமை இருக்கிறதா என்று சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 

click me!