கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் மூவாற்றுமுகம் குன்னத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜாக்சன் (38). திருவட்டார் நகர இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர். இவரது மனைவி உஷாகுமாரி. இவர் திருவட்டார் பேரூராட்சியின் 10-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார்.
கன்னியாகுமரி அருகே காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தலைமறைவான பிரபல ரவுடியை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் மூவாற்றுமுகம் குன்னத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜாக்சன் (38). திருவட்டார் நகர இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர். இவரது மனைவி உஷாகுமாரி. இவர் திருவட்டார் பேரூராட்சியின் 10-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார். நேற்று இரவு ஜாக்சன் அந்த பகுதியில் உள்ள ஆர்.சி. சர்ச் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜாக்சனை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
undefined
அலறியப்படி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரது அலறம் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பியது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவான பிரபல ரவுடி உட்பட 6 பேர் கொண்ட கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர். பெண் கவுன்சிலரின் கணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவட்டார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.