Mettur Dam Open : மேட்டூர் அணை திறப்பு எப்போது.? தேதி குறிக்க முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

By Ajmal KhanFirst Published Jul 28, 2024, 12:10 PM IST
Highlights

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107அடியை கடந்துள்ள நிலையில், அணையில் இருந்து தண்ணீரை எப்போது முதல் திறந்து விடலாம் என்பது தொடர்பாக ஆலோசிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களோடு ஆலோசனைகூட்டம் நடைபெற்றுவருகிறது.

மேட்டூர் அணை நிலவரம்

விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ள மேட்டூர் அணை சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 100 அடியை எட்டியுள்ளது. கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள கேஆர்எஸ், கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளது. இதனால் தமிழகத்திற்கு ஒரு லட்சத்து 65ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டமும் கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 15 தினங்களுக்கு முன்பு 45அடியாக இருந்த மேட்டூர் அணை தற்போது முழு கொள்ளளவை எட்டவுள்ளது. 

Latest Videos

மேட்டூர் அணை திறப்பு எப்போது.?

இந்தநிலையில் மேட்டூர் அணையை திறக்கும் தேதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.  மேட்டூர் அணையில் நீர் இருப்பு 108 அடியை எட்டியுள்ள நிலையில், அனையை திறப்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக டெல்டா மாவட்ட , மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் அணை திறப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mettur: சீறி பாய்ந்து வரும் 1.50லட்சம் கனஅடி நீர்.! கிடுகிடுவென உயரும் மேட்டூர்.!முழு கொள்ளளவை எப்போது எட்டும்

click me!