இஸ்லாமியர்கள் கோரிக்கை..! நாளைய பாத யாத்திரையை திடீர் என ஒத்திவைத்த அண்ணாமலை..! காரணம் என்ன.?

Published : Sep 27, 2023, 01:38 PM IST
இஸ்லாமியர்கள் கோரிக்கை..! நாளைய பாத யாத்திரையை திடீர் என ஒத்திவைத்த அண்ணாமலை..! காரணம் என்ன.?

சுருக்கம்

மிலாது விழா ஊர்வலம்  மேட்டுப்பாளையத்தில் நடைபெறவுள்ளதையொட்டி, நாளை திட்டமிடப்பட்டிருந்த பாத யாத்திரையை வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

அண்ணாமலையில் பாதயாத்திரை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த இரண்டு மாதங்களாக தமிழகம் முழுவதும் என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். ராமேஸ்வரத்தில் தனது பயணத்தை தொடங்கிய அண்ணாமலை, ராமநாதபுரம். மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி என பல பகுதிகளுக்கு சென்ற அண்ணாமலை நேற்று முன் தினம்கோவையில் தனது நடைபயணத்தை தொடங்கினார்.

அப்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பாக அண்ணாமலை கூறுகையில், கோவை மாநகர பாஜக மாவட்டத் தலைவரும் தொண்டர்களும் இந்த என் மண் என் மக்கள்  பயணத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். மக்கள் எழுச்சியை உணர முடிகிறது. தொண்டர்களின் அன்பை உணர முடிகிறது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

39 தொகுதிகளிலும் வெற்றி

கோவை பாராளுமன்ற தேர்தலில் மக்கள் முடிவு செய்து விட்டார்கள். வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், கோவை பாஜகவின் கோட்டை என்று நிரூபிக்கும்.  கோவை உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெற்றியடையச் செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து 39 எம்பிக்களை அனுப்பி, நமது பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என கூறியிருந்தார். இதனையடுத்து நாளை மேட்டுப்பாளையம் பகுதியில் தனது பாத யாத்திரையை நடத்த  இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

 

அண்ணாமலை நடை பயணம் ஒத்திவைப்பு

இந்த நிலையில் இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகள் கொண்டாடும் மீலாது நபி பண்டிகை. மேட்டுப்பாளையத்தில் நாளை மீலாது நபி ஊர்வலம் மற்றும் நமது நடைபயணத்தால் ஏற்படும் போக்குவரத்து இடர்பாடுகளை கருத்தில் கொண்டு நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டுப்பாளையத்தில் நாளை நடைபெறவிருந்த நமது என் மண் என் மக்கள் நடைபயணம் அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

 நமது கோரிக்கையை ஏற்று ஒத்துழைப்பை நல்கிய கோவை வடக்கு மாவட்ட பாஜக சகோதர சகோதரிகளுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  உங்களையும் மேட்டுப்பாளைய மக்களையும் 4ஆம் தேதி நமது நடைபயணத்தின் போது சந்திக்க ஆவலுடன் உள்ளேன் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

காங்கிரசில் சேருவதா, திமுகவில் சேருவதா என்ற குழப்பத்திற்கு கமல்ஹாசன் விடை தேடுகிறார் - அண்ணாமலை விமர்சனம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெரியார் 8 பதவிகளை ராஜினாமா செய்தவர்..! இவர்கள் பதவிக்காகவே உயிர் வாழ்பவர்கள்.. நாஞ்சில் சம்பத் கிண்டல் பேச்சு
ஐடி ஊழியர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை.. சிக்கிய கடிதம்.. பார்த்து அரண்டு மிரண்டு போன போலீஸ்