ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு ஏழையின் கண்ணீரை உங்கள் கரங்கள் துடைத்தால் அதனால் அடைகின்ற பெருமை என்பதும் என்னைத்தான் சேரும் அதே நேரம். யாரோ ஒருத்தர் உதாசீனப்படுத்தினால் அதனால் வருகின்ற வசவும் - திட்டும் கூட என்னைத்தான் வந்து சேரும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைந்த்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட10ஆயிரத்து 205 பேருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், “அரையணா காசாக இருந்தாலும் அரசாங்க காசு"- என்று கிராமங்களில் சொல்வார்கள் ஏனென்றால் அரசாங்க வேலைக்கு இருக்கின்ற மவுசு எந்தக் காலத்திலும் குறையாது. போட்டித் தேர்வுகளில் தேர்வு பெற்று எப்படியாவது ஒரு அரசுப் பணியை வாங்கிவிட வேண்டும் என்பது, படித்த இளைஞர்களுடைய ஒரு பெரிய கனவு! அந்த அடிப்படையில், இன்றைக்கு உங்களுடைய இலட்சியக் கனவு நிறைவேறி இருக்கிறது என்றே சொல்லவேண்டும். அதனுடைய அடையாளம்தான்.
இப்போது உங்கள் கையில் இருக்கின்ற பணி நியமன ஆணைகள் இந்த நொடி உங்களுக்கும் உங்கள் அப்பா, அம்மாவிற்கும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ. அதே மகிழ்ச்சியோடுதான் நானும் இங்கே உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன் ஒருவருக்கு வேலை கிடைக்கிறது என்றால், அது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பயனளிக்கும். இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால், பல தலைமுறைக்குப் பயனளிக்கும் அந்த வகையில் பல தலைமுறைக்கு பயனளிக்கப்போகின்ற பணி நியமன ஆணை தான், உங்கள் கையில் ஒப்படைத்திருக்கிறோம். பல லட்சம் பேர் தேர்வு எழுதி லட்சத்தில் ஒருவராக நீங்கள் எல்லாம் தேர்வாகி இருக்கிறீர்கள் இப்படி லட்சத்தில் ஒருவராக இருக்கின்ற உங்களுக்கு ‘மக்கள் சேவை' - என்ற ஒன்றுதான் இலட்சியமாக இருக்கவேண்டும் அதற்காக மட்டும்தான் நீங்கள் எல்லோரும் பணியாற்ற வேண்டும்.
மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவதே மக்களாட்சி அந்த வகையில் அரசாங்கம் தீட்டுகின்ற எந்தத் திட்டமாக இருந்தாலும், நன்மைக்காகத்தான்! அது மக்கள் அரசின் திட்டங்கள் பல்வேறு சேவைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் மிக முக்கியமான பணியை நீங்கள் எந்தக் குறையுமில்லாமல் நிறைவேற்ற வேண்டும். "மக்கள் சேவையே மகேசன் சேவை''- என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார். அப்படிப்பட்ட மகத்தான பணிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கக்கூடிய உங்கள் எல்லோரையும் இந்த நேரத்தில் நான் மனதார வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். நீங்கள் எல்லோரும் இப்போது அரசு ஊழியர்களாக ஆகியிருக்கிறீர்கள். அரசு ஊழியர்களில் தன்னலம் கருதாமல் மக்களுக்காகவே வாழுகிறவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
ஒரு கருவியோ அல்லது இயந்திரமோ சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் அதில் இருக்கின்ற ஒவ்வொரு பாகமும் பழுதில்லாமல் சிறப்பாக செயல்படவேண்டும். அது போலத்தான், அரசு என்ற மாபெரும் இயந்திரம் சீரிய முறையில் மக்களுக்கு சேவை செய்ய அரசு ஊழியர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் முழு ஈடுபாட்டுடன் பங்களிக்க வேண்டும்! உங்களைப் போன்ற இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் அரசு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறுவது என்பது அந்தக் குடும்பங்களில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தித்தருவதோடு அரசு நிர்வாகத்தில் ஒரு புதிய வேகத்தையும், உற்சாகத்தையும் இது நிச்சயமாக அளிக்கும்.
அரசின் திட்டங்கள் பாரபட்சமில்லாமல் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டும் நம்முடைய அரசின் கொள்கையை அரசின் அங்கமாக இருக்கின்ற நீங்கள் எல்லோரும் மனதில் வைத்து செயலாற்றவேண்டும் என்று நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன். இந்த அரசு சமூகநீதி காக்கும், மக்கள் நலன் பேணக்கூடிய அரசாக விளங்கிக் கொண்டிருக்கிறது ஒரு அரசனிடம் முறை வேண்டும் போதெல்லாம். எளிமையாக காட்சி தந்து தீர்ப்பை பெற்றால். விரும்பும் போது மழையை பெற்றது போல மக்கள் மகிழ்வார்கள் என்று புறநானூறு சொல்லுகிறது.
அதைப் போல மக்கள் உங்களிடம் கோரிக்கையுடன் வரும்போதெல்லாம் என்னுடைய இன்னொரு முகமாக, என்னுடைய பிரதிநிதியாக, இந்த அரசாங்கத்தின் அலுவலராக இருக்கின்ற நீங்கள் மக்களை எளிமையாக அணுகி அவர்கள் குறைகளையும், பிரச்சனைகளையும் தீர்த்து வைத்து, அரசின் திட்டங்களையும் கொள்கைகளையும் அவர்களிடம் சேர்த்து பயனடையச் செய்யவேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள் அதைத்தான் நீங்கள் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு ஏழையின் கண்ணீரை உங்கள் கரங்கள் துடைத்தால் அதனால் அடைகின்ற பெருமை என்பதும் என்னைத்தான் சேரும் அதே நேரம். யாரோ ஒருத்தர் உதாசீனப்படுத்தினால் அதனால் வருகின்ற வசவும் - திட்டும் கூட என்னைத்தான் வந்து சேரும் எனவே எனக்கு நல்ல பெயராக இருந்தாலும் கெட்ட பெயராக இருந்தாலும் உங்கள் செயல்பாட்டைப் பொறுத்துதான் அது அமையும். உங்களில் யாரும் பொது ஒழுங்கிற்கு மாறாக பண்பாட்டிற்கு மாறாக நடந்து கொள்ள மாட்டீர்கள் என்று நான் முழுவதுமாக நம்புறேன். நீங்களும் நடுத்தர ஏழை எளிய - விளிம்பு நிலைக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்தான். யாரால் ஆனாக்கப்பட்டு இந்தப் பணியை நீங்கள் அடைந்திருக்கிறீர்களோ அந்த மக்களுக்கு நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
குரூப்-4 என்பது உங்க முதல் படிதான் இதற்கு அடுத்து மேல் நிலையில் உள்ள தேர்வுகளையும் எழுதி உயர்பொறுப்புகளுக்கு வாருங்கள். உங்களால் முடியும்! உங்களால் மட்டுமே முடியும்! உங்களால் முடியாதது வேறு யாராலும் முடியாது என்று இந்த மாநிலத்தின் முதலமைச்சராக மட்டுமில்லை. உங்களுடைய தந்தை நிலையில் இருந்துப் என்னுடைய வாழ்த்துகளைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நிறைவாக இன்று பணியாணை பெற்றிருக்கும் உங்களுக்கும் இந்த நிகழ்ச்சியின் மூலமாக அனைத்து மாண்புமிகு அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை அலுவலர்கள் வரை உள்ள அனைவருக்கும் நான் ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புறேன்.
: பணியிடங்களுக்குத் தேர்வானவர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கி உரைhttps://t.co/NoDiib49yr
— M.K.Stalin (@mkstalin)
உங்களிடம் கோரிக்கை மனுவுடன் வருகிறவர்களிடம் முதலில் உட்கார வைத்து பேசுங்கள். அவர்களுடைய பிரச்சினையை, கோரிக்கையை காது கொடுத்து கேளுங்கள். அதுவே வந்தவர்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கையைத் தரும் மன நிறைவை தரும்! உட்கார வைத்து பேகந்துதான். சக மனிதருடைய சுயமரியாதை என்று நினைத்து அதற்கு மதிப்பு கொடுங்கள். அதனால், என்னுடைய இந்தக் கோரிக்கையை எல்லாரும் கடைப்பிடிப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்படி கேட்டால், அவர்களுடைய பாதி பிரச்சனை தீர்ந்து போய்விடும், பாதியளவுக்கு நிம்மதியை அடைந்துவிடுவார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.