விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கபடி போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் பொன்முடி வீரர்களுடன் களத்தில் இறங்கி கபடி விளையாடினார்.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவிலான கபடி, கைப்பந்து, கால்பந்து, மல்லர் கம்பம் போட்டிகள் நேற்று நடைபெற்றது. விளையாட்டு போட்டியினை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, திமுக எம் எல் ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், ஆட்சியர் பழனி கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
விளையாட்டு போட்டியில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு திறமையை வெளிபடுத்தினர். அப்போது கபடி விளையாட்டு போட்டியினை துவக்கி வைத்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கல்லூரி மாணாவர்களோடு நானும் சேர்ந்து விளையாடுவேன் யாரும் என்னை அவுட் செய்ய கூடாது என கூறிகொண்டே கல்லூரி மாணவ விளையாட்டு வீரர்களுடன் கபடி, கபடி என பாடியாறு கபடி விளையாடி மகிழ்ந்தார்.
விளையாட்டு போட்டி நிகழ்வினை தொடங்கி வைத்தபோது அமைச்சர் பொன்முடி கபடி விளையாடிய நிகழ்வு அனைவரின் மத்தியிலும் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியது.