விழுப்புரம் தக்காதெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(42). இவருக்கும் கோலியனூர் பகுதியைச் சேர்ந்த விஜி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
பணம், நகைகளை எடுத்துச்சென்று வேறொருவருடன் உல்லாச வாழ்க்கை நடத்துவதாக பிரிந்து சென்ற மனைவியை பழிவாங்குவதற்காக கணவர் போஸ்டர் அச்சடித்து ஒட்டிய சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் தக்காதெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(42). இவருக்கும் கோலியனூர் பகுதியைச் சேர்ந்த விஜி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், 2021ம் ஆண்டு வெங்கடேசனை விட்டுப் பிரிந்து சென்ற விஜி கோலியனூரை சேர்ந்த கன்னியப்பன் என்பவரை 2வது திருமணம் செய்துகொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இதையும் படிங்க;- ஆஹா ஸ்பெஷல் மசாஜா.. ஆசை ஆசையாய் சென்ற சென்னை ஐடி ஊழியர்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
இந்நிலையில், மனைவியை விஜியை பழிவாங்குவதற்காக வெங்கடேசன் விழுப்புரம், கோலியனூர் பகுதியில் முழுவதும் போஸ்டர்களை அச்சடித்து ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதில் விஜி என்பவர் வெங்கடேசனை கல்யாணம் செய்து 25 வருடமாகி அனு அம்மு என்ற இரண்டு பெண் பிள்ளைகளும், பேரன் பேத்திகளும் உள்ளது. இவர் சமீபகாலமாக என்னிடம் இருந்த 20 பவுன் நகை, 15 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை எடுத்து கொண்டு கோலியனூரை சேர்ந்த கங்கையம்மன் கோவில் தெருவில் வசிக்கும் கன்னியப்பன் என்பவருடன் உல்லாச வாழ்க்கை வாழ்கிறார். மேலும் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க;- Tamilnadu Rain:7 நாட்களுக்கு விடாதம் மழை! வச்சு செய்யப்போகுதாம் இந்த மாவட்டங்களில்! வானிலை மையம் அலர்ட் மெசேஜ்
இதுகுறித்து விஜி வளவனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் புகாரின் பேரில் வெங்கடேசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.