மணல் கொள்ளையை தடுத்தவர் கொலை! பின்னணியில் கரூர் கேங்! புகைப்பட ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

Published : Jul 15, 2025, 12:36 PM IST
Annamalai

சுருக்கம்

கரூரில் மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற மணிவாசகம் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பு இருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். 

கரூர் அருகே வாங்கலில் காவிரி ஆற்றுப் படுகையில் வெங்கடேசன், மணிவாசகம் ஆகியோருக்கு நிலம் உள்ளது. மணல் அள்ளுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலை அடுத்து மணிவாசகம் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் மேலும், மணி வாசகத்தின் தம்பி உள்பட நான்கு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மணல் கொள்ளையை தடுத்தவர் கொலை

இதுதொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கரூரில், மணல் கொள்ளையைத் தடுக்க முயற்சித்த மணிவாசகம் என்பவர், வாங்கல் வெங்கடேஷ் என்பவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு பெண்கள் உட்பட, நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி

திமுக ஆட்சிக்கு வந்ததும், அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஆற்றில் மணல் அள்ளலாம், அதனைத் தடுப்பவர்கள் இருக்க மாட்டார்கள் என்று, தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியது, அனைவருக்கும் நினைவிருக்கும். இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வாங்கல் வெங்கடேஷ் என்ற நபர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என்று தெரியவருகிறது.

பின்னணியில் கரூர் கேங்

கனிம வளக் கொள்ளையைத் தடுக்க முயற்சித்த அரசு அதிகாரிகளை, அவர்கள் அலுவலகத்திலேயே வைத்து வெட்டிக் கொலை செய்ததும் இதே திமுக ஆட்சியில்தான். தற்போது, இன்னொரு கொலை. மணல் கொள்ளையைத் தடுத்தால் கொலை செய்வோம் என்று பொதுமக்களுக்கு விடப்பட்ட நேரடி மிரட்டல் இது. சட்டத்தைக் குறித்துச் சிறிதும் பயமின்றி, கொலை செய்யும் அளவுக்கு மணல் கொள்ளையர்களின் அராஜகம் அத்துமீறியிருக்கிறது என்றால், அவர்கள் பின்னணியில் கரூர் கேங் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

 

அண்ணாமலை எச்சரிக்கை

மணிவாசகம் அவர்கள் இறப்பிற்கு நீதி வேண்டும். இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள், மணல் கொள்ளையின் பின்னணியில் இருப்பவர்கள் என அனைவரும், சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இல்லையேல், கரூர் பொதுமக்களின் கடும் எதிர்ப்பினை திமுக அரசு சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இன்னும் மழையின் ஆட்டம் முடியல! வானிலை மையம் எச்சரிக்கையும்! டெல்டா வெதர்மேனின் அப்டேட்டும்
வளர்ச்சி அரசியலா..? டேஷ் அரசியலா..? மாமதுரையில் நிகழும் அசாதாரண சூழல்.. முதல்வர் பரபரப்பு