
சென்னை அண்ணா பல்லைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் 550 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. 2017 – 2018 ஆண்டு கல்வி ஆண்டிற்கான பி.இ.மற்றும் பி.டெக் படிப்புகளில் சேர்வதற்காக ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 451பேர் விண்ணப்பத்து உள்ளனர். மொத்தம் 2 லட்சம் பொறியல் படிப்புக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கிடையே பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பித்தவர்களின் தரவரிசையை முடிவு செய்வதற்கான ரேண்டம் என்று இன்று வெளியிடப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை மறுதினம்(22-06-2017) தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேண்டம் எண்ணை தெரிந்து கொள்ள மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தின் எண்ணை அண்ணா பல்கலையின் இணையதளத்தில் குறிப்பிட்டு ரேண்டம் எண்ணை அறிந்து கொள்ளலாம்..
மருத்துவப் படிப்புகளுக்கு நீர் தேர்வு முறை நடப்பாண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதால், பி.இ.மற்றும் பி.டெக் படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக அளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்