10 ஆயிரம் மாணவர்களுக்கு ‘ஆப்பு’ வைத்த அண்ணா பல்கலைக்கழகம்.. மறுபடியும் அரியர்..மாணவர்கள் ஷாக் !

Published : Mar 20, 2022, 12:54 PM IST
10 ஆயிரம் மாணவர்களுக்கு ‘ஆப்பு’ வைத்த அண்ணா பல்கலைக்கழகம்.. மறுபடியும் அரியர்..மாணவர்கள் ஷாக் !

சுருக்கம்

பொறியியல் மாணவர்களுக்கு நவம்பர் - டிசம்பர் 2021 ஆம் ஆண்டிற்கான செமஸ்டர் பருவ தேர்வுகள்  கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது.

ஆன்லைன் தேர்வு :

ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக மாணவர்கள் வீட்டில் இருந்தே தேர்வு எழுதும் " ஓப்பன் புக் தேர்வு " நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

அதன்படி, கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் 14-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பி.இ, பி.டெக் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் காலை 9 மணி அளவில் தேர்வு எழுத தொடங்கி மதியம் 12:30 மணியளவில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் ஒன்றரை மணி நேரம் கூடுதலாகவும் கொடுக்கப்பட்டிருந்தது. 

அண்ணா பல்கலைக்கழகம் ‘சர்ச்சை’ :

இந்த நேரம் எதற்காக என்றால் ஆன்லைன் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைதாள்களை பதிவேற்றம் செய்வதற்காக நேரம் ஒதுக்கப்பட்டது.  இந்த தேர்வில் வினாத்தாளை தாமதமாக பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கும், விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யாத மாணவர்களுக்கும் ஆப்சென்ட் போடப்பட்டுள்ளது. அதன்படி 10,000 மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அப்சென்ட் போட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த விவகாரம் குறித்து துணைவேந்தர் மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ? என்பது குறித்து தெரிய வரும் என கூறப்படுகிறது.மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டு இருப்பது உறுதியாகும் பட்சத்தில்  அவர்கள் தேர்வில் தோல்வி அடைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

2026க்குள் மேலும் 30 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு! மத்திய அரசு அறிவிப்பு!
அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்? வெளியான முக்கிய அப்டேட்