அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் திடீர் உயர்வு.! இத்தனை சதவிகிதம் அதிகரிப்பா.? மாணவர்கள் ஷாக்

By Ajmal Khan  |  First Published Aug 25, 2024, 2:08 PM IST

அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான தேர்வு மற்றும் சான்றிதழ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இளநிலை படிப்புகளுக்கான செய்முறைத் தேர்வுக் கட்டணம் 150 ரூபாயிலிருந்து 225 ரூபாயாகவும், முதுநிலை படிப்புகளுக்கான கட்டணம் 450 ரூபாயிலிருந்து 650 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.


அண்ணா பல்கலைக்கழகம் கட்டணம் உயர்வு

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் தேர்வுக் கட்டணம், ப சான்றிதழ் கட்டணம், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் கட்டணம், ஆய்வறிக்கைக் கட்டணம் ஆகியவற்றை  உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டண உயர்வின்படி, இளநிலை படிப்புகளுக்கான செய்முறை, எழுத்துத் தேர்வுக் கட்டணமாக ஒரு தாளுக்கு 150 ரூபாய் பெறப்பட்டு வந்த நிலையில் தற்போது 50% உயர்த்தப்பட்டு 225 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளநிலை ப்ராஜெக்ட் தீசிஸ் தேர்வுக்கான கட்டணம் ரூ.300 இல் இருந்து ரூ.450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  முதுநிலை செய்முறை மற்றும் அனைத்து எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.450 இல் இருந்து ரூ.650 ஆக உயர்ந்துள்ளது. 

Latest Videos

undefined

Holiday : மீண்டும் 3 நாட்கள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியருக்கும் தான்-எப்போ தெரியுமா.?

தேர்வு மற்றும் சான்றிதழ் கட்டணம் உயர்வு

முதுநிலை ப்ராஜெக்ட்டின் ஒவ்வொரு நிலைக்கும் கட்டணம் 600 ரூபாயில் இருந்து 900 ரூபாயாக  உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல தேர்வுக் கட்டணத்துடன் சான்றிதழ் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.  இளங்கலை, முதுநிலை மதிப்பெண் சான்றிதழ், தற்காலிக சான்றிதழ், இளங்கலை பட்டம் சான்றிதழுக்கான கட்டணம் 1000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.  தன்னாட்சி அதிகாரம் பெறாத கல்லூரிகளின் கட்டணமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது அதன் படி 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல்  வெளியாகியுள்ளது. 

விஜயகாந்த் பிறந்தாநாள் விழா.! திடீரென மயங்கி விழுந்த சண்முகபாண்டியன்

click me!