School Holidays : மாணவர்கள் குட்நியூஸ்..செப்டம்பர் 14, 15, 16 ஆகிய 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை!
செப்டம்பர் மாதத்தில் வரும் தொடர் விடுமுறை நாட்கள் குறித்த தகவல்கள் இங்கே. விடுமுறை நாட்களை பயன்படுத்தி சொந்த ஊர் அல்லது சுற்றுலா செல்ல திட்டமிடுங்கள்!
தொடர் விடுமுறை- சொந்த ஊர் செல்லும் பயணிகள்
சொந்த ஊரில் உரிய வேலை கிடைக்காத காரணத்தால் லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊரை விட்டு வெளியூரில் பிழைப்பு தேடி செல்கின்றனர். அவர்களுக்கு வார விடுமுறை தினத்தில் ஊருக்கு செல்வதை விட பொங்கல், தீபாவளி, புத்தாண்டு, ரம்ஜான் என் விஷேச நாட்களில் கிடைக்கும் கூடுதல் விடுமுறை நாட்களில் குடும்பத்தை சந்திக்கவும், குடும்பத்தோடு கொண்டாடவும் ஊருக்கு செல்வார்கள். அந்த வகையில் சென்னையில் இருந்து மட்டும் தொடர் விடுமுறை நாட்களையொட்டி ஏராளமான மக்கள் வெளியூருக்கு படையெடுப்பார்கள்.
ஆகஸ்ட் மாதத்தை கொண்டாடிய மாணவர்கள்
அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இரண்டு வாரங்கள் தொடர் விடுமுறை கிடைத்தது. குறிப்பாக ஆகஸ்ட் 15ஆம் தேதி வியாழக்கிழமை அரசு விடுமுறை இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் ஒரு நாள் விடுப்பு அடுத்து சனி மற்றும் ஞாயிறு அரசு விடுமுறை விடப்பட்டது. இதனால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையையொட்டி வெளியூர் மற்றும் சுற்றுலா செல்லும் மக்களுக்கு உதவியாக இருந்தது.
செப்டம்பர் மாத விடுமுறை என்ன.?
இதனை தொடர்ந்து அடுத்த வாரமான ஆகஸ்ட் 24ஆம் தேதி சனிக்கிழமை, 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 26ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி விடுமுறை விடப்படது. இதன் காரணமாக தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இந்த விடுமுறையை பயன்படுத்தி ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்திருந்தனர். இதே போல மீண்டும் தொடர் விடுமுறை வருமா என பொதுமக்கள் மட்டுமில்லாமல் பள்ளி, கல்லூரி மாணவர்களும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.
School College Holiday: ஆகஸ்ட் 28ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியாக போகும் அறிவிப்பு!
தொடர் விடுமுறை- திட்டமிடப்படும் சுற்றுலா
அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் செப்டம்பர் மாதம் வரவுள்ளது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 3 அரசு விடுமுறை நாட்கள் வருகிறது. குறிப்பாக செப்டம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை விநாயகர் சதூர்த்தி விழா, செப்டம்பர் 15ஆம் தேதி ஓணம் பண்டிகை, செப்டம்பர் 16ஆம் தேதி மிலாடு நபி விடுமுறை வரவுள்ளது. இதில் குறிப்பாக செப்டம்பர் 14, 15, 16 ஆகிய சனி, ஞாயிறு மற்றும் திங்கட் கிழமை தொடர் விடுமுறை வரவுள்ளது. இதனால் வெளியூர் செல்ல திட்டமிடும் பயணிகளுக்கு இந்த விடுமுறை நாட்கள் பயனுள்ளதாக அமைய முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளலாம்.