விஜயகாந்த் பிறந்தாநாள் விழா.! திடீரென மயங்கி விழுந்த சண்முகபாண்டியன்

By Ajmal Khan  |  First Published Aug 25, 2024, 1:40 PM IST

தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அவரது மகன் சண்முக பாண்டியன் மயக்கம் அடைந்தார்.


விஜயகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டம்

பிரபல நடிகரும். தேமுதிகவின் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தமிழக அரசியலில் மறைக்க முடியாத தலைவராக உள்ளார். திமுக- அதிமுகவிற்கு எதிராக களம் இறங்கி சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக உயர்ந்தார். அரசியலில் உச்சத்தில் இருந்த விஜயகாந்திற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த டிசம்பர் மாதம் மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். அவரது மறைவையொட்டி அரசு மரியாதையோடு விஜயகாந்தின் உடல் அடக்கம் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்தநிலையில் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று தேமுதிக சார்பாக பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது.

Tap to resize

Latest Videos

சண்முக பாண்டியன் மயக்கம்

சென்னையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் சண்முக பாண்டியன், விஜயபிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். தொடர்ந்து விஜயகாந்தின் சிலையையும் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா சண்முகப் பாண்டியன் திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது , படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என கூறினார். தேமுதிக தலைமைக் கழகத்திற்கு இன்று முதல்  ' கேப்டன் ஆலயம் ' என்று பெயர் சூட்டப்படுகிறது என தெரிவித்தார். இன்று பத்தாயிரம் பேர் விஜயகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ளனர்.  தேமுதிக அலுவலகம் முன்பு சிக்னல் அமைக்குமாறு பல முறை மனு அளித்து விட்டோம்.. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறினார். 

மருத்துவமனையில் அனுமதி

அப்போது பிரேமலதா மற்றும் அவரது மகன்களை தொண்டர்கள் சந்தித்து கை குலுக்கி கொண்டனர். ஏராளமான மக்கள் ஒரே இடத்தில் கூடியதால் அதிகளவு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இது மட்டுமின்றி வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்ததால் விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் மயக்கம் அடைந்தார். உடனடியாக சண்முக பாண்டியனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

click me!