மேட்டூர் அணை நீர் இருப்பு கிடு, கிடுவென குறைந்தது.! நீர் வரத்து என்ன தெரியுமா?

By Ajmal Khan  |  First Published Aug 25, 2024, 8:43 AM IST

கர்நாடகா நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததையடுத்து நீரின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவில் இருந்து  படிப்படியாக சரிந்துள்ளது.


கர்நாடகா நீர் திறப்பு குறைப்பு

விவசாயத்திற்கு முக்கிய வாழ்வாதாரமாக இருப்பது காவிரி நீராகும், கர்நாடகா மாநிலம் மேற்கு மலை தொடர்ச்சியில் உருவாகும் காவிரி பல மாவட்டங்களை கடந்து தமிழகத்திற்கு வருகிறது. பொங்கி வரும் காவிரியை தமிழக விவசாயிகளுக்காக சேமித்து வைக்கும் பொக்கிஷமாக மேட்டூர் அணை உள்ளது. இந்த அணையில் நீர் இருப்பை பொறுத்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். அந்த வகையில் கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் உரிய தண்ணீர் இருப்பு இல்லை. இதனால் பயிர் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை நீடித்தது. இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக அங்குள்ள கேஎஸ்ஆர் மற்றும் கபிணி அணைகள் கிடு, கிடுவென நிறைந்தது. இதனால் வேறு வழியின்றி தமிழகத்திற்கு 2 லட்சம் கன அடி அளவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

குறைந்தது காய்கறிகளின் விலை.! கோயம்பேட்டில் தக்காளி வெண்டைக்காய், பீட்ரூட் விலை என்ன தெரியுமா.?

நிரம்பிய மேட்டூர் அணை

இதனால் இரண்டே வாரத்தில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. கடந்த ஜூலை 30ஆம் தேதி 120 அடியை மேட்டூர் அணை எட்டியதையடுத்து அணைக்கு வரும் உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி கரையோர பகுதியில் வெள்ளக்காடாக காட்சியளித்து. கடைமடை வரை காவிரி தண்ணீர் சென்று சேர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியோடு விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் கர்நாடகாவில் மழை குறைந்ததையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. 

மழை குறைந்தது- குறையும் மேட்டூர் அணை நீர் மட்டம்

இதனால் தமிழக எல்லைப்பகுதியான ஒகேனக்கல்லில் அருவியில் குளிக்கவும், படகு சவாரி செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்ததையடுத்து நீர் மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. 120 அடியை கொண்ட மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 118.39 அடியாக உள்ளது. நீர் வரத்து 6598அடியாக உள்ளது. விவசாயம் மற்றும் குடிநீருக்காக அணையில் இருந்து 12,700 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் அணையின் நீர் மட்டம் குறைந்துள்ளது. வரும் நாட்களின் மழையின் நிலவரத்தை பொறுத்து தண்ணீர் திறப்பு குறைக்கப்படும் என தெரிகிறது. 

click me!