இவங்களை எல்லாம் எப்படி கலைஞர் சமாளிச்சிரோ? ரஜினியின் பேச்சை ரசித்து கேட்ட முதல்வர்

By Velmurugan s  |  First Published Aug 24, 2024, 11:27 PM IST

கலைஞர் கருணாநிதிக்கு வந்த சோதனைகள் வேறு யாருக்காவது வந்திருந்தால், அரசியலை விட்டே காணாமல் போயிருப்பார்கள் என்று புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
 


சென்னையில் “கலைஞர் எனும் தாய்” புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், “இங்கு வந்ததும் என்னிடம் நீங்கள் பேசுகிறீர்களா? என் கேட்டனர். ஆனால் இங்கு வந்த பின்னர் பேசாமல் போக முடியுமா? அறிவாளிகள் இருக்கின்ற இடத்தில் பேசாமல் இருப்பது தான் அறிவாளித்தனமாக இருக்கும். ஆனால் என்ன செய்வது? இப்போது பேசித் தான் ஆகவேண்டிய நிலை உள்ளது.

அக்கறையா இன்சூரன்ஸ் போட்டது இதுக்கு தானா? ரூ.25 லட்சத்திற்காக மனைவியை கொன்ற கணவன்

Tap to resize

Latest Videos

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய விதம் சிறப்பு. உலகில் வேறு எந்த தலைவருக்கும் இப்படிப்பட்ட நூற்றாண்டு விழா நடைபெற்றதில்லை. இனியும் கொண்டாடப்போவதும் இல்லை. படையப்பா படம் திரையிடப்பட்ட போது கலைஞர் வந்திருந்தார். சில இருக்கைகள் தள்ளி ஓரமாக முதல்வர் ஸ்டாலின் அமர்ந்திருந்தார். நான் அருகில் அழைத்தும் அவர் வரவில்லை. காரணம் அவர் தன் தந்தைக்கு மரியதை கொடுத்து தளி அமர்ந்திருந்தார். 

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த அரசியல் பிரமுகர்; அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்

ஒரு பள்ளி ஆசிரியருக்கு புதிய மாணவர்களால் எந்த பிரச்சினையும் கிடையாது. பழைய மாணவர்களைத் தான் சமாளிக்க முடியாது. இந்த பழையவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று வகுப்பை விட்டு செல்லாமல் இருப்பவர்கள். இங்கும் அதிகமான பழைய மாணவர்கள் உள்ளனர். அதிலும் துரைமுருகன் என ஒருவர் இருக்கிறார். கலைஞர் கண்ணில் விரல்விட்டு ஆட்டியவர். இவர்களை எல்லாம் வைத்து கலைஞர் எப்படித் தான் சமாளித்தாரோ? முதல்வர் ஸ்டாலின் உங்களுக்கு என் வாழ்த்துகள்” என்றார். ரஜினிகாந்தின் சுவாரசியமான பேச்சைக் கேட்டு முதல்வர் உட்பட அரங்கத்தில் கூடியிருந்த அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்.

click me!