6 வயது சிறுமியை வன்கொடுமை செய்த தந்தை; அரசியல் பிரமுகரின் செயலால் அதிர்ச்சியில் மருத்துவர்கள்

By Velmurugan s  |  First Published Aug 24, 2024, 2:46 PM IST

சென்னையில் 6 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி ரவியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் தலையில் காயமடைந்த நிலையில் எழும்பூர் அரசு மருத்தவமனையில் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது சிறுமியின் பிறப்புறுப்பில் காயம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் புளியந்தோப்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த திரை பிரபலங்கள்

Tap to resize

Latest Videos

undefined

மருத்துவர்களின் புகாரின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமியின் தந்தையே அவரை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தையும், புரட்சி பாரதம் கட்சியின் புதுச்சேரி மாவட்ட தலைவருமான ரவியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். முன்னதாக சிறுமியின் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்த ரவி பின்னர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

மனைவியை தொடர்ந்து இயக்குனர் நெல்சனுக்கு செக்! தனிப்படை போலீசார் தீவிர விசாரணை!

குற்றம் ஒப்புக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து ரவி மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தந்தையே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!