சென்னையில் கால் வலிக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனின் காலை அகற்றிய மருத்துவமனையின் அங்கீகாரம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை வேளச்சேரி நேரு நகர் 3வது தெருவை சேர்ந்த சின்னையாவின் மகன் ஹரிகிருஷ்ணன். இவர் 7ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுவனுக்கு பல நாட்களாக கால் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கடந்த ஏப்ரல் மாதம், சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள மவுண்ட் பன்னோக்கு மருத்துவமனைக்கு மகனை அழைத்து சென்றுள்ளார்.
இதையும் படிங்க: School Colleges Holiday: ஹேப்பி நியூஸ்! நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான அறிவிப்பு!
பரிசோதனை செய்த மருத்துவர் சிறுவனின் காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை. சிகிச்சை அளித்தால் சீராகிவிடும் என்றும் முதலில் தெரிவித்துள்ளார். பின்னர் அப்படியே விட்டுவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் கூறி சிறுவனின் காலை அகற்றியுள்ளார். இதையடுத்து, தவறான சிகிச்சையால் தான் மகனின் கால் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: துணிச்சலான பணிக்காக தமிழக அரசின் விருது பெற்ற பிரபல வன கால்நடை மருத்துவர் தற்கொலை! நடந்தது என்ன?
சின்னையாவின் புகார் தொடர்பாக, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் அறிவுறுத்தலின்படி டிஎம்எஸ் அதிகாரிகள் கடந்த 19-ம் தேதி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மருத்துவமனை உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது அம்பமானது. மேலும் அங்கு போதி மருத்துகள், அவசரக் கால மருத்துவர்கள் இல்லாதது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 15 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.