
சாதி வாரி கணக்கெடுப்பு
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி தொடர்ந்து பல்வேறு அறிக்கைகளையும், போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். அந்த வகையில் கர்நாடகம், பிகார், ஒதிஷா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேசத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு முழு அளவில் தொடங்கப் பட்டிருக்கிறது. சமூகநீதியை நேசிப்பவர்களின் செவிகளில் இச்செய்தி தேனாக பாய்கிறது. ஆனால், சமூகநீதியின் தொட்டிலான தமிழ்நாடு, இந்த செய்தி செவிகளில் விழுந்து விடாமல் காதுகளை மூடிக்கொண்டிருக்கிறது என தமிழக அரசை என பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்கனவே கடுமையாக விமர்சித்திருந்தார்.
மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பு
ஆனால் தமிழக அரசோ சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு எடுத்தால் தான் அதிகாரப்பூர்வமாக இருக்கும் என தெரிவித்து வந்தது. இந்த நிலையில் மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களை சந்தித்த போது, மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்போம் எடுப்போம் என அறிவித்துள்ளது இதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பிற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் ஆயிரக்கணக்கான போராட்டங்களை நடத்தி, ஆயிரக்கணக்கான கடிதங்கள், சந்திப்புகளை நடத்தியுள்ளார்.
திமுக, காங்கிரஸ் சொந்தம் கொண்டாடுவதா.?
இப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பும் எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கு காங்கிஸ் கட்சியும், திமுகவும் சொந்தம் கொண்டாடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என தெரிவித்தார். உங்களுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் என கேள்வி எழுப்பியவர், ஆட்சி அதிகாரம் இருந்தபோது திமுக, காங்கிரஸ் சாதிவாரி கணக்கெடுப்பிற்காக ஒன்றும் செய்யவில்லையென்றும் குற்றம் சாட்டினார். பிரதமர் மோடி அவர்களின் அரசு மட்டும் தான் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
கல்வி, வேலைவாய்ப்பு தெரியவரும்
தமிழகத்தில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க Caste Survey அவசியம் என்றும் அதனை தமிழக அரசு தான் எடுக்க வேண்டும் என்று அன்புமணி கேட்டுக்கொண்டார். caste census வேறு caste survey வேறு என்றும் தெரிவித்த அவர், தமிழகத்தில் பின்தங்கிய மக்களின் நிலை பற்றி உண்மையான விவரத்தை அறிந்து கொள்ள தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் தான் தமிழக மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு வசதிகள் , பொருளாதாரம், குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும் என அன்புமணி கூறினார்.