திருச்சியில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் டயர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. பேருந்தில் பயணம் செய்த 27 பயணிகளும் உயிர் தப்பினர். ஓட்டுநரின் சாதுர்யத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஆம்னி பேருந்தில் தீ விபத்து
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அவரச தேவைக்காக பொதுமக்கள் ரயிலில் பயணம் செய்ய விரும்புவார்கள். ஆனால் தற்போது ரயிலில் இடம் இல்லாத காரணத்தால் பேருந்தில் பயணம் செய்கின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் அவ்வப்போது தீவிபத்து ஏற்பட்டு பயணிகள் உயிரிழப்பும் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இது போன்ற தீ விபத்து இன்று அதிகாலை நடைபெற்றுள்ளது.
நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்
திருச்சியில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு தனியார் பேருந்து 27 பயணிகளோடு புறப்பட்டுள்ளது. திருச்சி மன்னார்புரம் மேம்பாலத்தைக் கடந்தபோது பேருந்து டயர் வெடித்து திடீரென தீப்பற்றியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் பேருந்தை கடும் சிரமத்திற்கு மத்தியில் ஓரமாக நிறுத்தினார். இதனையடுத்து பயணிகளை அலர்ட் செய்தவர், உடனடியாக பேருந்தில் இருந்து இறங்குமாறு தெரிவித்தார். பயணிகளும் உடனடியாக பேருந்தில் இருந்து இறங்கினர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்ட நிலையில் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமானது. நல்வாய்ப்பாக 27 பேர் உயிர் தப்பினர்.
இன்றைய தக்காளி விலை என்ன.? கோயம்பேட்டில் வெங்காயம், பீட்ரூட், கேரட் விலை நிலவரம் என்ன.?