கட்சி அறிவிப்பதோ, கொடி வெளியிடுவதோ முக்கியம் இல்ல; விஜய் கட்சி குறித்து கார்த்தி சிதம்பரம் கருத்து

By Velmurugan s  |  First Published Aug 22, 2024, 11:39 PM IST

கட்சி அறிவிப்பதோ, கொடி வெளியிடுவதோ முக்கியம் கிடையாது நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என எம்.பி.கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் அதன் தலைவரும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் சார்பில் இன்று அந்த கட்சியின் கொடி வெளியீடப்பட்டுள்ளது. கட்சியை அறிவிப்பது பெரிய விஷயம் கிடையாது, நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்,

நீட், GST உள்ளிட்ட விவகாரங்களில் நடிகர் விஜயின் நிலைப்பாடு என்பதை தெரிவிக்க  வேண்டும், இதுபோன்று இந்தியாவில் நடைபெற்று வரும் ஒவ்வொரு நிகழ்விலும் அவருடைய நிலைப்பாடு என்ன என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும் வெறும் கட்சியை அறிவித்துவிட்டு கொடியை வெளியிட்டு விட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டால் மட்டும் பத்தாது எல்லோருக்கும் தான் தமிழ் பற்று தேச பற்று  உள்ளது, எனக்கும் தான் தேசிய பற்று தமிழ் பற்று உள்ளது, அவரது கொள்கை என்ன என்பதை விவரிக்க வேண்டும்,

Tap to resize

Latest Videos

undefined

தவறான திசையில் பைக் பயணம்; எமனாக வந்த பள்ளிப் பேருந்து - ஒரே நிமிடத்தில் காலியான மொத்த குடும்பம்

விஜய் தனது கொடியை அறிமுகப்படுத்தியதை மட்டும் வைத்து நான் எந்த கருத்தும் கூற முடியாது, தனியாக கட்சி நடத்துவது  எவ்வளவு சிரமம் என்பது பாட்டால் தான் விஜய்க்கு தெரியும், விஜயும் பட்டு தெரிந்து கொள்வார், முதலமைச்சரின் நிவாரண நிதி பாகுபாடு இன்றி அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும்,உயிர் இழப்புகள் ஏற்படும் போது அனைவருக்கும் ஒரே மாதிரியான இழப்பீடு தொகையினை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பதே எனது கருத்து-

தலித் முதலமைச்சராக பாஜக சார்பில் அதிக அளவு வழங்கப்பட்டுள்ளது தமிழகத்தில் வாய்ப்பு கொடுத்தால் பாஜக தலித் முதலமைச்சரை உருவாக்குவோம் என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறிய கருத்துக்கு பதில் அளித்த கார்த்தி சிதம்பரம் எச். ராஜா அண்ணாமலையை கேட்டு சொல்கிறாரா? பேசுகிறாரா என்பது தெரியவில்லை என்றார்.

எதிரிக்கும் வரக்கூடாத சோகம்; மாணவியின் கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்த தந்தை, சகோதரி

பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களை தமிழக அரசு தடுத்து நிறுத்த முடியாது நடந்த பிறகு விசாரணையை விரைந்து நடத்தி குற்றவாளி கைது செய்து தண்டனை இதனால் வாங்கித் தரலாம் இதற்கு சமுதாய மாற்றம் இருந்தால் மட்டுமே இத்தகைய குற்றங்களை தடுக்க முடியும் ஒவ்வொரு வீட்டிலும் குடும்பத்திலும் பெண்களை மதிப்பதற்கு ஆண்களுக்கு சிறு வயதிலிருந்து கற்றுத் தர வேண்டும் அப்போதுதான் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் அரசாங்கத்தால் மட்டுமே தீர்வு காண முடியாது என்றார்.

click me!