2026 சட்டமன்றத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்று, அதில் வெற்றி பெற்று தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் பெற வேண்டும் என்று எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினரின் செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “நெல்லை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி கொலை செய்யப்பட்டு பல நாட்களை கடந்து விட்டது. ஆனால், தற்போது வரை இந்த வழக்கில் ஒருவரைக் கூட காவல் துறையினர் கைது செய்யவில்லை.
இந்த விவகாரத்தில் நாம் மிகவும் மௌனம் காத்து வருகிறோம். இது பற்றி நாம் கருத்து தெரிவிக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் தற்போது கூலிப்படைகள் அரசியல் தலைவர்களை தொடர்ந்து கொலை செய்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் அவ்வபோது எண்கவுண்டர்களும் நடைபெறுவதால் வழக்கு விசாரணை சரியான பாதையில் செல்வதாக நாம் நினைக்கலாம். ஆனால், அது உண்மை கிடையாது. வழக்கை முடிப்பதற்காகவே காவல் துறையினர் எண்கவுண்டரை நடத்துகின்றனர்.
undefined
எடப்பாடி பழனிசாமி சசிகலாவிடம் நேரில் சென்று வாழ்த்து பெறுவார் - ராஜன் செல்லப்பா
கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு இருக்கும் உரிமை நமக்கு கிடையாதா? கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருக்கும் உரிமை நமக்கு கிடையாதா? நாமும் அவர்களைப் போன்று ஆழமாக பேச வேண்டும். நாம் தற்போதும் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். கூட்டணியை மதிக்கிறோம், திமுக.வின் திட்டங்களை வரவேற்கிறோம். ஆனால் நமக்கான உரிமைகளை நாம் பேசித்தான் ஆகவேண்டும்.
உலகில் எங்கு தான் உள்ளது கைலாசா? நித்தியானந்தா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பாஜக.வின் அழிவு ஆரம்பமாகிவிட்டது. 2029ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிப்பது உறுதி. ஆனால், அதற்கு முன்பாக வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் வெற்றி பெற்று தமிழக அமைச்சரவையில் இடம் பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.