Kilambakkam : கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்.. களத்தில் அதிரடியாக இறங்கிய தமிழக அரசு- நிதி ஒதுக்கீடு

By Ajmal Khan  |  First Published Jan 4, 2024, 11:29 AM IST

சென்னையின் முக்கிய இடங்களில் இருந்து கிளம்பாக்கம் பேருந்து நிலையம் நீண்ட தூரத்தில் இருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகார் வந்த நிலையில், கிளாம்பபாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் அமைக்க தமிழக அரசு சார்பாக ரயில்வே துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம்

மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு பூக்கடை பகுதியில் இருந்த பேருந்து நிலையம், சென்னை கோயம்பேட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டது. தற்போது கோயம்பேடு பேருந்து நிலையம் பகுதியும் பெரும் வளர்ச்சி அடைந்த காரணத்தால் கூட்ட நெரிசல் அதிகம் காணப்படுகிறது. இதனால் பேருந்து நிலையத்தை மாற்றம் செய்த தமிழக அரசு முடிவு செய்து அதிமுக ஆட்சி காலத்தில் சென்னையை அடுத்த கிளம்பாக்கம் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையமானது கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிவைக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம்

மிகப்பெரிய அளவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டாலும், பயணிகள் அந்த இடத்திற்கு செல்ல கூடுதல் நேரம் ஆவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. கிளம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டிற்கு குறைந்தபட்சம் 20 கி.மீட்டர் தூராமானது உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என கூறப்பட்டது. இந்தநிலையில் தமிழக அரசு சார்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பகுதியில் மின்சார ரயில் நிலையம் அமைக்க ரயிவ்வே துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. மாநில அரசின் செலவில் ரயில் தண்டவாளம் அமைக்கப்படவுள்ளது.  கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் அமைக்க முதற்கட்டமாக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ரயில்வே வாரியத்திற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்கியது. 

நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு

கிளாம்பாக்கத்திற்கு வண்டலூரில் இருந்து புதிய ரயில் வழித்தடத்தை அமைக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தது இந்த நிலையில்  வழக்கமாக ரயில்வே திட்டங்களை ரயில்வே துறையை நிதி ஒதுக்கி செய்யும். ஆனால் தற்பொழுது இது தமிழ்நாட்டிற்கான தேவை என்பதால் இந்தத் திட்டத்திற்கு சிஎம்டிஏ நிதி ஒதுக்குகிறது. திட்டத்திற்கான முதற்கட்ட தொகையாக 20 கோடி ரூபாய் ரயில்வே வாரியத்திற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்கி உள்ளது.  இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக இந்த பணிகளை நிறைவு செய்ய வேண்டும் எனவும் ரயில்வே வாரியத்திற்கு சிஎம்டிஏ கோரிக்கை விடுத்துள்ளது. அடுத்தடுத்து ஆகும் செலவினை கணக்கில் கொண்டு மற்ற தொகைகள் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

Murasoli : கேட்ட தொகையும் கொடுக்கல.. வெறும் கையால் முழம் போட்டு, வார்த்தைகளால் வடை சுட்ட மோடி- விளாசிய முரசொலி

click me!