தமிழகத்தில் எஸ். ஐ முதல் ஏடிஜிபி வரை டிரான்ஸ்பர்.! பட்டியல் கேட்டு டிஜிபி திடீர் சுற்றறிக்கை- காரணம் என்ன.?

By Ajmal KhanFirst Published Jan 4, 2024, 9:41 AM IST
Highlights

பதவி உயர்வு பெற்றும் சொந்த ஊரிலோ அல்லது ஒரே இடத்திலோ தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட காலவரையில் பணியில் இருந்தால் அவர்களும் பணியிட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழக டிஜபி காவல் துறை அதிகாரிகளுக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடங்கியது தேர்தல் பணி

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 முதல் 4 மாத காலமே உள்ளது. இதனால் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. அந்தவகையில் தேர்தல் ஆணையம் சார்பாக காவல்துறைக்கு தேர்தல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஒரே இடத்தில் 3 வருடங்களுக்கு மேல் பணியாற்றுபவர்களை இடமாறுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

Latest Videos

இதனையடுத்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.  நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சொந்த ஊரிலும் மற்றும் மூன்று வருடம் தொடர்ந்து ஓரிடத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். 

காவல் துறை அதிகாரிகள் இடமாற்றம்

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஜூன் 30-ம் தேதிக்குள் மூன்று வருடம் முழுமையாக முடிந்தவர்கள் பட்டியலை தயாரித்து அனுப்ப உத்தரரவிட்டுள்ளார். குறிப்பாக பதவி உயர்வு பெற்றும் சொந்த ஊரிலோ அல்லது ஒரே இடத்திலோ தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட காலவரையில் பணியில் இருந்தால் அவர்களும் பணியிட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். உதவி ஆய்வாளர் முதல் ஏடிஜிபி வரை உள்ள அதிகாரிகளின் பட்டியலை தயாரித்து டிஜிபி அலுவலகத்திற்கு வருகிற 10-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் பணிக்கு பயன்படுத்த கூடாது

மேலும்   தேர்தல் ஆணையத்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளை தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது என்றும்,  கிரிமினல் வழக்கு நிலுவையில் நீதிமன்றத்தில் உள்ள அதிகாரிகளையும் தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

Pongal Gift : பொங்கல் பரிசு தொகுப்பான அரிசி, வெல்லத்திற்கு பதிலாக ரூ.500.. வங்கி கணக்கில் செலுத்த முடிவு
 

click me!