ரயில்களை கோவை வழியாக இயக்குங்கள்; ஒற்றை மாட்டு வண்டியில் 20க்கும் மேற்பட்டோர் ஏறி போராட்டம்

By Velmurugan s  |  First Published Mar 7, 2024, 5:44 PM IST

வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களை கோவை வழியாக இயக்காமல் போத்தனூர் ரயில் நிலையம் வழியாக இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.


கோவை ரயில் நிலையத்தின் வழியாக இயக்கப்படாமல் போத்தனூர், இருகூர் ரயில் நிலையங்கள் வழியாக வட மாநிலங்களில் இருந்து வரும் ஆறு ரயில்கள் கேரளாவிற்கு இயக்கப்படுகிறது. இந்த ஆறு ரயில்களையும் கோவை ரயில் நிலையம் வழியாக இயக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து கட்சியினர் சார்பில் மாட்டு வண்டியில் சென்று மனு அளிக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.

Tap to resize

Latest Videos

கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள கீதாகபே பகுதியில் இருந்து அனைத்து கட்சியை சேர்ந்தவர்கள் மாட்டு வண்டியில் சென்று மனு அளித்தனர். இந்த போராட்டத்தில் மாட்டு வண்டியில் சென்றவாறு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பியவாரு ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றனர். 

தளபதியின் விலையில்லா வீடு வழங்கும் திட்டம்; முதல் முறையாக 7 வீடுகளை வழங்கிய தமிழக வெற்றி கழகத்தினர்

இந்த மனு அளிக்கும்  போராட்டத்தில் திமுகவினர் கைகளில் வடையுடன் வந்து மோடி சுட்ட வடை எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். மாட்டு வண்டியில் வந்து மனு அளிக்கும் போராட்டம் காரணமாக ரயில் நிலையம் முன்பாக சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

click me!