சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் திணறி வருவதால் வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர்.
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெயில் உச்சத்தை பெற்று வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் திணறி வருவதால் வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். சென்னையில் கோடை காலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த ஆண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: யூடர்ன் அடித்து திமுக பக்கம் திரும்ப போகிறதா பாமக? அதிர்ச்சியில் அதிமுக.! பாஜக.!
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: 07.03.2024 முதல் 13.03.2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
07.03.2024 மற்றும் 08.03.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் மழை எங்கும் பதிவாகவில்லை. மேலும் மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: School Holiday: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. நாளை விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு..!