உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.! சீறிப்பாய்ந்து வரும் காளைகள்.! போட்டி போட்டு அடக்கும் வீரர்கள்

By Ajmal KhanFirst Published Jan 17, 2023, 9:42 AM IST
Highlights

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 1000காளைகளும் 350 மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்தான். தமிழர்களுடைய வீரத்தையும், கலாச்சாரத்தை பறைசாற்றும் இந்த ஜல்லிகட்டுப் போட்டிகளை பார்க்க உலகம் முழுவதில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அப்படி வருகை தருபவர்களை ஏமாற்றமல் சீறிப் பாய்ந்து வரும் காளைகளை கொஞ்சமும் அச்சம் கொள்ளாமல் துணிந்து நின்று அவற்றை அடக்கும் மாடுபிடி வீரர்கள் வீரம் அசாத்தியமானது. அந்த வகையில் விரு விருப்புக்கு பஞ்சம் இல்லாமல் போட்டியானது நடைபெறும்.

மீண்டும் திமுகவில் ரீ என்ட்ரி கொடுக்கப் போகும் மு.க.அழகிரி? செய்தியாளர்கள் கேள்விக்கு அதிரடி சரவெடி பதில்..!

போட்டியை தொடங்கி வைத்த உதயநிதி

ஜல்லிக்கட்டு போட்டியென்றால் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் ஆகிய ஜல்லிக்கட்டுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் அந்த வகையில் இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார். அமைச்சர் மூர்த்தி, அன்பில் மகேஷ், நடிகர் சூரி ஆகியோரும் போட்டியை பார்வையிட்டனர். இந்த ஜல்லிக்கட்டில் 1000 காளைகளும், 350 வீரர்களும் களம் காண்கின்றனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஆவணங்கள் சரிபார்க்கபட்டு, உடற்தகுதியுள்ள காளைகளும், வீரர்களும் போட்டியில் களமிறங்கியது. ஒவ்வொரு சுற்றாக போட்டியானது நடைபெற்று வருகிறது.

பாலமேடு ஜல்லிக்கட்டு..! 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்..! காளை முட்டியதில் உயிரிழப்பு

ஜல்லிக்கட்டு-குவியும் பரிசுகள்

காளைகளை அடக்கும் மாடு பிடி வீரர்களுக்கும், மாடு பிடி வீர்ர்களிட்ம இருந்து தப்பிக்கும் காளை உரிமையாளர்களுக்கும்  தங்கம், வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், கட்டில், பீரோ, மிக்ஸி, கிரைண்டர் உள்பட பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது. போட்டியில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் சார்பில் கார் வழங்கப்பட உள்ளது. இதே போல சிறந்த காளைக்கு அமைச்சர் உதயநிதி சார்பாக கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.

வெற்றி பெற்ற விஜயபாஸ்கர் காளை

இந்த போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கருப்பன் மற்றும் கொம்பன் காளைகளும் பங்கேற்றது. வாடி வாசலில் இருந்து பாய்ந்து வந்த அந்த காளையை வீரர்கள் அடக்க முற்பட்ட நிலையில் யாருடைய கையிலும் சிக்காமல் பாய்ந்து சென்று வெற்றிபெற்றது.

இதையும் படியுங்கள்

அமைச்சர் பொன்முடியின் சகோதரர் திடீர் மரணம்..! அஞ்சலி செலுத்தும் திமுக நிர்வாகிகள்

click me!