காணும் பொங்கல்..! சுற்றுலா தலங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்..? எத்தனை பேருந்துகள் தெரியுமா.?

By Ajmal KhanFirst Published Jan 17, 2023, 8:33 AM IST
Highlights

காணும் பொங்கலையொட்டி சென்னையில் பல்வேறு இடங்களுக்கு மக்கள் சென்று வரும் வகையில் 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

காணும் பொங்கல் கொண்டாட்டம்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. போகிப்பொங்கல், தை பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர். பணி நிமித்தமாக சென்னையில் பணியாற்றியவர்கள் தங்களது உறவினர்களோடு கொண்டாடும் வகையில் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். பொண்டிகை பண்டிகையில் கடைசி நாளான இன்று தங்கள் உறவினர்களை பார்க்கவும், சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்தோடு செல்வதும் பொதுமக்களின் வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு அந்த அந்த பகுதியை சேர்ந்து பொக்குவரத்து துறை சார்பாக சிறப்பு பேருந்து ஏன்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத வாய்ப்பு மறுப்பு..! வெளி மாநிலத்திற்கு செல்லும் மாணவர்கள் - அன்புமணி ஆவேசம்

சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு பேருந்து

அந்தவகையில் சென்னையில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து துறை வெளியிட்டு அறிவிப்பில், காணும் பொங்கலை முன்னிட்டு, எதிர்வரும் 17.01.2023 அன்று மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், அண்ணா சதுக்கும், வண்டலூர் உயிரியல் பூங்கா. கோவளம், மாமல்லபுரம், பெசன்ட் நகர் கடற்கரை, குயின்ஸ் லேண்ட் ஆகிய இடங்களுக்கு 480 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும்,18.01.2023 அன்று அதிகாலை பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூரிலிருந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 125 சிறப்புப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

நடுக்கடலில் தத்தளித்த மானை மீட்ட தூத்துக்குடி மீனவர்கள்

click me!