எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மலர் தூவி மரியாதை

By Velmurugan sFirst Published Dec 24, 2022, 11:22 AM IST
Highlights

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
 

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல் நபராக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உடன் இருந்தனர்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தேதி நீட்டிப்பு? அமைச்சர் விளக்கம்

இதனைத் தொடர்ந்து நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள மேடையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பழனிசாமியைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா உள்ளிட்டோரும் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளனர்.

அமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சி உலக சாதனையாக அங்கீகரிப்பு

பல்வேறு முக்கிய தலைவர்கள் வருவதை ஒட்டி மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

click me!