மக்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு!

By Manikanda Prabu  |  First Published Mar 6, 2024, 7:19 PM IST

மக்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது. எனவே, பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளின் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவை பொறுத்தவரை தற்போது வரை யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் தேமுதிக நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று நடைபெற்ற 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். “கூட்டணி உறுதி என்ற நிலைபாட்டினை எட்டியுள்ளோம். அதிமுகவுடன் தேமுதிக வெற்றிக்கூட்டணியாக அமையும். அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதிகள் குறித்து பேசப்படும்.” என தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

அலை மோதும் கூட்டம்: திருப்பதி ஏழுமலையானிடம் அட்வைஸ் கேட்கும் அயோத்தி குழந்தை ராமர

இதனிடையே, கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலை போன்றே, கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வட சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய 4 தொகுதிகளை ஒதுக்க அதிமுக தரப்பில் தயாராக இருப்பதாக தெரிகிறது. ஆனால், வட சென்னைக்கு மாற்றாக வேறு ஒரு தொகுதியை வழங்க வேண்டும் என தேமுதிக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

click me!