வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்

By Ajmal Khan  |  First Published Sep 28, 2023, 12:23 PM IST

இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் எம்.எஸ். சுவாமிநாதன். வேளாண் துறையில் மிகப்பெரிய விஞ்ஞானியான இவர், உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார்


எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு

இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் எம்.எஸ். சுவாமிநாதன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இன்று காலை காலமானார். அவருக்கு வயது 98, 
எம்.எஸ்.சுவாமிநாதன், ஆகஸ்ட் 7, 1925 இல், கும்பகோணம் டாக்டர் எம்.கே.சாம்பசிவன் மற்றும் பார்வதி தங்கம்மாள்  ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். எம்.எஸ்.சுவாமிநாதன் விலங்கியல் துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார்.  அதன் பிறகு, அவர் வேளாண் அறிவியல் மற்றும் மரபியல் படிப்பைத் தொடர்ந்தார்.  இந்தியாவில் பசுமைப் புரட்சி 1960களில் தொடங்கியது. இந்த நேரத்தில், அதிக மகசூல் தரும் வகை விதைகள், இயந்திரமயமாக்கப்பட்ட பண்ணை கருவிகள், நீர்ப்பாசன முறைகள், களைக்கொல்லிகள் மற்றும் உரங்கள் போன்ற புதுமைகளின் வேலைவாய்ப்பு மூலம் இந்தியாவின் விவசாயம் ஒரு நவீன தொழில்துறை அமைப்பாக மாற்றி அமைத்தார்.  

Tap to resize

Latest Videos

பசுமை புரட்சியின் தந்தை

இந்தியாவிலும் உலக அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராய்ச்சி நிர்வாகி, மத்திய வேளாண்மைத் துறைச் செயலாளர், மத்திய திட்டக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளையும் எம்.எஸ்.சுவாமிநாதன் வகித்தவர். வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெற வைத்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டவர் இன்று காலை சென்னையில் காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமில்லாமல் சமூக ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்

இபிஸ்க்கு பதிலாக ஓபிஎஸ்ஐ இணைக்கிறதா பாஜக.? இன்று முக்கிய முடிவை அறிவிக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன்

click me!