தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கார் ஒன்று வாங்கிய 4 நாட்களிலேயே தீயில் எரிந்து நாசமானதால் அதன் உரிமையாளர் செய்வதறியாது திகைத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சமத்துவபுரம் புதுகாலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவனைந்த பெருமாள். இவர் ஆசை ஆசையாக பணம் சேர்த்து சொந்த பயன்பாட்டிற்காக கார் ஒன்றை வாங்க வேண்டும் என எண்ணி கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பழைய நான்கு சக்கர வாகனம் ஒன்றை வாங்கி அதை கடந்த நான்கு நாட்களாக மிகுந்த சந்தோஷத்துடன் ஒட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அவர் சமத்துவபுரத்தில் இருந்து நாசரேத் நோக்கி தனது காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த காரில் எலக்ட்ரிக் ஷாக் ஏற்பட்டு காரில் இருந்து புகையுடன் கூடிய தீ கார் முழுவதும் பரவியதால் காரில் இருந்த அவர் கீழே இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கார் மல மலவென தீப் பிடித்து எரிந்தது.
பாட்டிலுக்கு ரூ.10 இல்ல ரூ.20 கூட வாங்குவோம்; திருப்பூரில் மதுக்கடையில் வாடிக்கையாளர் வாக்குவாதம்
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும் இது குறித்து தகவல் அறிந்த மெய்ஞானபுரம் காவல் துறையினர் மற்றும் சாத்தான்குளம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயில் எரிந்து கொண்டிருந்த காரை துரிதமாக செயல்பட்டு அணைத்தனர். எனினும் கார் முழுவதும் எரிந்து எலும்புக்கூடு போல காட்சியளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.