தமிழ்நாட்டில் 4 மாதங்களுக்கு பிறகு கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா வைரஸ் உலகத்தை புரட்டி எடுத்தது என்றே சொல்லலாம்.
கொரோனா வைரஸின் ருத்ரதாண்டவம் உலகம் முழுக்க பலரின் உயிரை பறித்தது. இந்த நிலையில் தற்போது H3N2 வைரஸ் பரவி வரும் நிலையில் இது பெரும் அச்சத்தை உண்டாக்கி உள்ளது. இன்ஃப்ளூயன்ஸா (குளிர்காய்ச்சல்) ஏ வைரஸின் துணை வகையான H3N2, இந்தியாவின் இரண்டு உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
undefined
இதையும் படிங்க..மொபைல் போனுக்கு ஆசைப்பட்டு.. 4 காம கொடூரர்களால் சீரழிந்த பள்ளி மாணவியின் வாழ்க்கை!! அதிர்ச்சி சம்பவம்
ஹரியானாவில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் கர்நாடகாவில் உயிரிழந்துள்ளார். இந்த வைரஸினால் ஏற்பட்ட காய்ச்சலால் நாடு முழுவதும் 451 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. திருச்சி சிந்தாமணி பகுதி பூசாரி தெருவைச் சேர்ந்த உதயகுமார் (27) என்பவர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்தார். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க..ரியல் No.1 இவர்தான்.. நடிகர் விஜயை பின்னுக்கு தள்ளிய அல்லு அர்ஜுன்.! எவ்வளவு சம்பளம் தெரியுமா..?
ஆனால், தொற்று உறுதி செய்யப்பட்ட பரிசோதனை அறிக்கை வருவதற்கு முன்பே, அவரது உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கியதால், அவர் நேற்று காலை உயிரிழந்தார். உயிரிழந்த உதயகுமாரின் உடல், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி தகனம் செய்யப்பட்டது. தொடர்ந்து மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று வருகின்றன என்று அரசு அதிகாரிகள் கூறினார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஏற்பட்ட கொரோனா உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..அண்ணாமலை செய்த ஊழல்கள் பட்டியல் ரெடி.. எப்போ ரிலீஸ் தெரியுமா.? திமுக கொடுத்த ஷாக்