பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் சென்னை உடற்பயிற்சி கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆப்ரகாம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சென்னை நந்தனம் உடற்பயிற்சி கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆப்ரகாம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்பயிற்சிக் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆப்ரகாம் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜார்ஜ் ஆபிரகாமை இன்று (சனிக்கிழமை) கைது செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட 23 வயதாகும் மாணவி டிசம்பர் 2ஆம் தேதி சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்துவந்த காவல்துறை அதிகாரிகள் சனிக்கிழமை மதியம் 3 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் இருக்கும் முதல்வர் இல்லத்துக்குச் சென்று ஜார்ஜ் ஆபிரகாமை கைது செய்தனர்.
லூலு குடும்பத்தின் ரூ.600 கோடி ஊழல்! ஆவணங்களைக் கைப்பற்றியது அமலாக்கத்துறை!