ரூ.430 கோடி மதிப்பீட்டில் கழிப்பறை அமைக்கும் திட்டம்... கே.என்.நேரு முன்னிலையில் கையெழுத்தானது ஒப்பந்தம்!!

By Narendran S  |  First Published Mar 8, 2023, 10:38 PM IST

சென்னை மாநகராட்சி சார்பில் 430 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய கழிப்பறை அமைக்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் இன்று கையெழுத்தானது. 


சென்னை மாநகராட்சி சார்பில் 430 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய கழிப்பறை அமைக்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் இன்று கையெழுத்தானது. இதுக்குறித்து அமைச்சர் கே.என்.நேரு தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சியில் பொது மற்றும் தனியார் கூட்டு முறையில் ரூ.430 கோடி மதிப்பீட்டில் இராயபுரம், திரு.வி.க.நகர் மற்றும் தேனாம்பேட்டை (மெரினா) ஆகிய மண்டலங்களில் 372 இடங்களில் புதிய கழிப்பறைகள் கட்டவும், ஏற்கனவே உள்ள கழிப்பறைகள், சிறுநீர் கழிப்பறைகள் மற்றும் குளியலறைகளை புதுப்பிக்கவும், 1 வருடத்திற்கு கட்டுமானப் பணி மற்றும் 8 ஆண்டுகளுக்கு அதன் பராமரிப்பை மேற்கொள்ளவும் தனியார் நிறுவனங்கள் மூலம் பணிகள் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் இன்று (08.03.2023) ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: யாரையோ சமாதானப்படுத்த ஆளுநரைக் கட்டாயப்படுத்தக் கூடாது: அண்ணாமலை பேட்டி!!

Tap to resize

Latest Videos

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 954 பொதுக்கழிப்பிடங்கள் உள்ளன. இந்தக் கழிப்பிடங்கள் பொதுமக்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சுகாதார கட்டமைப்பினை உறுதி செய்திட பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலங்கள் 5, 6 மற்றும் 9 ஆகியவற்றில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் அனைத்து கழிப்பறைகளையும் பராமரிக்கவும், தேவைப்படின் புதிய கழிப்பறைகளை கட்டி பராமரிக்கவும் ஒரு முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டமன்ற மானியக் கோரிக்கையில் அறிவித்தார்.

இதையும் படிங்க: தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு... ரூ.25,000 சம்பளம்... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

undefined

அதனடிப்படையில், சென்னை மாநகரில் பொதுமக்களுக்கு நல்ல சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தருதல் மற்றும் திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தவிர்த்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு, முன்னோடி திட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது மற்றும் தனியார் கூட்டு முறையில் ரூ.430 கோடி மதிப்பீட்டில் திருவாளர்கள் ஆர்.எஸ்.பி. ஆர்ச் பிராஜக்ட் கன்சல்டன்ட் பிரைவேட் லிமிடெட் திருவாளர் மெட்டெக் டிசைன் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் என்ஜினியர்ஸ் மற்றும் திருவாளர் பெர்ஹ்ரா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று தனியார் நிறுவனங்களின் கூட்டமைப்பின் மூலம் பணிகள் மேற்கொள்ள இன்று (08.03.2023) ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.  

click me!