புதிய டாஸ்மாக் கடை திறக்க தடை.. குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்..!

By vinoth kumar  |  First Published Mar 9, 2023, 7:28 AM IST

 நேவல் மருத்துவமனை சாலையில் தற்போது புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க டாஸ்மாக் மேலாண் இயக்குனர், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஆகியோர் அனுமதி வழங்கி உள்ளனர். இந்த டாஸ்மாக் கடை செயல்பட தொடங்கினால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். 


சென்னை பெரியமேடு குடியிருப்பு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெரியமேட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமைச் செயலக ஊழியரான மனோகர் என்பவர்  உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பெரியமேட்டில் உள்ள நேவல் மருத்துவமனை சாலையில் வசித்து வருகிறேன். இந்த பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும், தினக்கூலி செய்பவர்களும், இப்பகுதியை சுற்றி வசித்து வருகின்றனர். இங்கு அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசுக் கல்லூரி, மத வழிபாட்டு தலங்களும் உள்ளன.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- சும்மா காமெடி பண்ணாதீங்க! ஜெயலலிதாவை எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒப்பிடுவதா? சிரிப்புதான் வருது! டிடிவி.தினகரன்.!

undefined

கடந்த 20 ஆண்டுக்கு முன்பு இதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தை தொடர்ந்து அந்த கடை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் நேவல் மருத்துவமனை சாலையில் தற்போது புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க டாஸ்மாக் மேலாண் இயக்குனர், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஆகியோர் அனுமதி வழங்கி உள்ளனர். இந்த டாஸ்மாக் கடை செயல்பட தொடங்கினால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். 

இதுதொடர்பாக, டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடந்தாண்டு மனு கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த பகுதியில் புதிய டாஸ்மாக் கடையைத் திறக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார். 

இதையும் படிங்க;-  ஏதாவது ஒரு ஏரியில் மிதப்பேன்!சிஇஓ மகளை திருமணம் செய்ய இருந்த நிஷாந்த் தற்கொலை! 3 நாட்களுக்கு பிறகு உடல் மீட்பு

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடையால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, பெரியமேடு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடைத் திறக்க தடை விதித்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை முடித்துவைத்தனர்.

click me!