அதிமுக பிரமுகரை பலி வாங்கிய பன்றிக்காய்ச்சல்...! சுகாதார விஜயபாஸ்கர் தொகுதியில் அதிர்ச்சி..!

By thenmozhi gFirst Published Nov 7, 2018, 1:11 PM IST
Highlights

பன்றிக் காய்ச்சல்...டெங்கு...இந்த பேரை கேட்டாலே தமிழ் நாடு மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவே அலறிக்கொண்டு இருக்கிறது
 

பன்றிக் காய்ச்சல்...டெங்கு...இந்த பேரை கேட்டாலே தமிழ் நாடு மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவே அலறிக்கொண்டு இருக்கிறது

தொலைக்காட்சி ஸ்கோரிலிங் அல்லது டிக்கர் பகுதிகளில் தொடர்ந்து பன்றிக்காய்ச்சலால் பாதிப்பு, பன்றிக் காய்ச்சலால் பலி என்ற கொட்டை எழுத்து செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. ஜாதி இனம்  மதம் பாகுபாடு இல்லாமல், அனைத்து தரப்பினரையும் பாரபட்சம் இல்லாமல் தாக்கி வருகிறது இந்த பன்றிக்காய்ச்சல் என்னும் கொடூர ஜுரம்.

முதலமைச்சர் எடப்பாடி உத்தரவின் பேரில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் சுற்றி சுழன்று தான்  வேலை செய்து வருகிறார். ஆனாலும் பன்றிக் காய்ச்சலை தமிழகத்தில் கட்டுப்படுத்தவே முடியவில்லை என்பது தான் உண்மை.

இந்த நிலையில், பன்றிக் காய்ச்சலின் தாக்கத்தால், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் தொகுதியில் அதிமுக நிர்வாகி ஒருவர் பலியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை தொகுதியில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தான் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அத்தொகுதிக்குட்பட்ட அத்திப்பள்ளம் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் இளைஞர் பாசறை நிர்வாகியாக இருந்தவர் புகழேந்தி. 

34 வயதான புகழேந்தி கடந்த பத்து நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். பின்னர் திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டும் அப்போலோவால் புகழேந்தியை காப்பாற்ற முடியவில்லை.அதனால் அவரை வீட்டிற்கு அழைத்து செல்லும்படி கேட்டுக்கொண்டு உள்ளனர்.

பின்னர் அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டார். அங்கும் அளிக்கப்பட்ட சிகிச்சை, பலன் அளிக்காததால் புகழேந்தி பரிதாபமாக உயிர் இழந்தார். டெங்கு, பன்றிக்காய்ச்சல் மரணங்கள் குறைந்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறி வரும் நிலையில், அமைச்சரின் தொகுதியில் அதிமுக நிர்வாகியே மரணம் அடைந்து இருப்பது உள்ளூர் மக்களிடேயே அச்சத்தையும் கலக்கத்தையும் உருவாக்கி உள்ளது.

click me!