பிஎட், எம்எட் படிப்பு... மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

Published : Sep 15, 2025, 02:30 PM IST
college student

சுருக்கம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்காத மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

B.Ed And M.Ed admission 2025 : அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மற்றும் எம்.எட். பாடப்பிரிவுகளுக்கான மாணாக்கர் சேர்க்கை இணையதள விண்ணப்பப் பதிவு 30.09.2025 வரை செயல்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கூறுகையில்,

பி.எட்., எம் எட் மாணவர்கள் சேர்க்கை

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின்படி 20.06.2025 அன்று சென்னை இராணி மேரி கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26ஆம் ஆண்டிற்கான பி.எட். மாணாக்கர்களின் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டு, மாணாக்கர் சேர்க்கை நடைபெற்றது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதல் கட்ட கலந்தாய்விற்கு பிறகு 2 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 49 காலியிடங்கள் மற்றும் 13 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 530 காலியிடங்கள் என மொத்தம் 579 இடங்கள் உள்ளன. இணையதளத்தில் விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் காலியாக உள்ள இடங்களில் சேர்ந்து பயில ஏதுவாக இணையதள விண்ணப்பப்பதிவு வசதி இன்று (15.09.2025) முதல் 30.09.2025 வரை தொடர்ந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

மாணவர்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் வாய்ப்பு

மேலும், மாணாக்கர் சேர்க்கைக்கான கூடுதல்  www.lwlase.ac.in என்ற இணையதளத்தில் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். அதேபோல், எம்.எட். பாடப்பிரிவில் காலியாக உள்ள இடங்களில் மாணாக்கர்கள் சேர்ந்து பயில ஏதுவாக மாணாக்கர் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவு வசதி 30.09.2025 வரை செயல்படும். விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் www.tngasa.in என்ற விண்ணப்பித்து பயன்பெறுமாறும் இணையதளம் கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்..! அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் ஐக்கியம்! விஜய் குஷி!
இந்து கோயிலை இடிக்க தீர்ப்பு கொடுக்க கோர்ட் வேண்டும்..! தீபம் ஏற்றச்சொன்னால் கோர்ட் வேண்டாமோ? அண்ணாமலை ஆவேசம்..!