நடிகைகள் தேவயாணி, கவுதமி செய்த அடடே காரியம்...! புகழாம இருக்க மாட்டீங்க...!

Asianet News Tamil  
Published : Feb 04, 2018, 12:39 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
நடிகைகள் தேவயாணி, கவுதமி செய்த அடடே காரியம்...! புகழாம இருக்க மாட்டீங்க...!

சுருக்கம்

Actresses Devayani Gauthami made it all too hard

உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு நடை பயணத்தில் நடிகைகள் தேவயாணி, கவுதமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

உலகிலேயே மிகவும் கொடிய உயிர்க்கொல்லி நோய் புற்றுநோய். அதனை பரவவிடாமல் தடுக்கும் வகையில் இன்று உலக புற்றுநோய் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

நடிகை கவுதமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் ஆண்டுதோறும் அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 

இந்நிலையில், சென்னை பெசன்ட்நகரில் அவரது அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நடைபயணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  

இதில் நடிகைகள் தேவயானியும் கவுதமியும் கலந்து கொண்டனர். இதில் பேசிய நடிகை கவுதமி, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும் ஆரம்பகட்டத்திலேயே புற்றுநோயை கண்டறிந்துவிட்டால் அதில் இருந்து மீள முடியும் என்றும் இளைஞர்கள் தாமாக முன்வந்து புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்றும் நடிகை கவுதமி கேட்டுக்கொண்டார். 

PREV
click me!

Recommended Stories

தேசிய கொடியை ஏற்றி முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி
Tamil News Live today 26 January 2026: அஜித், விஜய் பட கதாநாயகி இப்போ சீரியலில்.! சின்னத்திரையில் அதிரடி ரீ-என்ட்ரியாகும் சங்கவி!