இத தெரிஞ்சிகிட்டா நீங்க போலீஸுக்கு பயப்படத்தேவையில்லை...! அவர்களின் உரிமை இவ்வளவுதான்...!

 
Published : Feb 04, 2018, 11:59 AM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
இத தெரிஞ்சிகிட்டா நீங்க போலீஸுக்கு பயப்படத்தேவையில்லை...! அவர்களின் உரிமை இவ்வளவுதான்...!

சுருக்கம்

You know that you do not have to fear the police

நாட்டில் இருக்கும் மிக கடுமையான வேலைகளில் ஒன்று போலீஸ் பணி. இது முதலில் மக்களுக்கு சேவையாற்றவும், வன்முறைகளை தடுக்கவும், குற்றத்தை தவிர்க்கவும் கொண்டுவரப்பட்டது. 

ஆனால் தற்போது நிலை அப்படியே தலைகீழாக மாறி போய் உள்ளது. காரணம் பொதுமக்களுக்கும் காவலர்களுக்கும் இடையே இருந்த நட்புணர்வு குறைந்து போனதுதான். 

முன்பெல்லாம் தப்பு செய்தவர்கள் மட்டுமே போலீஸ் அதிகாரியை பார்த்து பயப்படுவார்கள். தற்போது போலீஸ் என்றால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி பணம் புடுங்குவார்கள் என மக்கள் நினைக்கும் அளவுக்கு காவல்துறையின் நிலை உள்ளது. 

இதில் சில போலீசார் நேர்மையாகவும் மனசாட்சிக்கு விரோதமில்லாமலும் நடந்து கொள்கின்றனர். அவர்களுக்கும் மக்கள் புகழ்ந்து தள்ளி பாராட்டுகளை குவிக்கத்தான் செய்கின்றனர். 

ஹெல்மெட் அணியாமல் போனால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை தான், ஆனால் நிற்காமல் போவோரை அடித்து மண்டை உடைக்கலாமா? வேகமாக போவோரை மடக்குகிறேன் என நினைத்து பிரேக் பிடிக்க வைத்து விபத்துகளை ஏற்படுத்தலாமா? என்பன போன்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழும்புகின்றன.

தவறு செய்யாத மக்கள் கூட போலீஸை பார்த்து பயப்படுகிறோம் என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம் தான். அதாவது அவர்களின் உரிமைகள் என்னவென்று நாம் தெரிந்துகொள்ளாததே. 

எந்த குற்றத்திற்கு எவ்வளவு அபராதம், அப்போது நாம் எவற்றையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதைதான் தற்போது பார்க்க போகிறோம்.

போலீசாருக்கு இருக்கும் உரிமைகள் என்ன...! பொதுமக்கள் செய்யவேண்டியவை என்ன?

வாகன ஓட்டிகள் விதியை மீறினால் போலீசார் வாகனங்களை நிறுத்தி கேள்வி கேட்கலாம். எங்கிருந்து வரீங்க? என்பன போன்று..

பதில் சொல்ல வேண்டிய கடமைகள் அனைவருக்கும் உண்டு. அவ்வாறு பதில் கூறவில்லை என்றால் விதி 177 படி ரூ. 500 அபராதம் விதிக்கலாம். 

வண்டியின் சாவியை பறிமுதல் செய்ய எவ்வித அதிகாரமும் போலீசாருக்கு இல்லை. வண்டி ரேசில் செல்பவர்களை போலீசார் நிறுத்தும்போது சாவியை பிடுங்குவது வழக்கம். ஆனால் பொதுமக்களிடம் அவ்வாறு  நடந்து கொள்ள உரிமை இல்லை. 

பொதுமக்களை மரியாதை குறைவா பேசுவதற்கு போலீசாருக்கு உரிமை இல்லை. ஒருமையில் கூட பேசக்கூடாது. சார், மேடம் என்றுதான் அழைக்க வேண்டும். 

சென்னையை பொறுத்தவரை வெள்ளை உடை அணிந்திருக்கும் போக்குவரத்து போலீசார் மட்டுமே அபராதம் கலெக்ட் செய்ய முடியும். அதுவும் எஸ்.ஐ. மற்றும் அவர்களுக்கும் மேல் அதிகாரிகள் மட்டுமே அபராதம் வசூலிக்க முடியும். 

கிராமத்தை பொறுத்தவரை காகி உடை அணிந்திருக்கும் போலீசாரே பணம் வசூலிக்க முடியும். ஆனால் இன்ஸ்பெக்டர் தான் வசூலிக்க முடியும். 

இதற்கும் கீழ் உள்ள அதிகாரிகள் உங்களிடம் பணம் வசூல் செய்தால் நம்பர் 100 - க்கு கால் செய்து அவர்களிடம் அதிகாரியின் பெயர், அவருடைய வண்டி எண், இடம் ஆகியவற்றை தெரிவித்தால் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.

போக்குவரத்து போலீசாருக்கு போக்குவரத்து விதிமீறல் குறித்து நடவடிக்கை எடுக்க மட்டுமே உரிமை உண்டு. திட்டவோ, அடிக்கவோ அவர்களுக்கு உரிமை இல்லை. 

வண்டி ஓட்டும்போது எல்லா ஆவணங்களும் ஒரிஜினல் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் சட்டம். 

அவ்வாறு உங்களிடம் ஒரிஜினல் லைசன்ஸ் இல்லையென்றால் உங்களிடம் ரூ. 100 அபராதம். வண்டியின் ஆவணங்கள் இல்லை என்றால் திருட்டு வண்டி என நினைத்து போலீசார் வண்டியை சீஸ் செய்ய உரிமை உண்டு.

NO U TURN, மற்றும் ONE WAY குள்ள நீங்கள் தெரியாமல் சென்றுவிட்டால் அதற்கான அபராத தொகை ரூ. 100. ஆனால் போலீசார் உங்களுக்கு ரூ. 1100 வரை அபராதம் விதிக்க முடியும் என கூறுவார்கள். 

காரணம் என்னவென்றால் ஆபத்து விளைவிக்கும் வகையில் வண்டி ஓட்டுதலுக்கு ரூ. 1000 அபராதம். இதையும் சேர்த்து போடும்போது அவ்வாறு போலீசார் சொல்லுவார்கள். 

ஆனால் பெரும்பாலும் அதற்கான வாய்ப்புகள் இருக்காது. நீங்கள் போலீசாரிடம் கேட்கலாம். சார் நான் தெரியாமல் வந்துவிட்டேன். ரூ. 100 தான் அபராதம். ஏன் ரூ. 1100 போடுகிறீர்கள் என்று. 

போலீசாருக்கு பயப்படமால் போலீசாரிடமே புகார் அளிக்க நம்பர் 100 ஐ பயன்படுத்த வேண்டும். போலீசாருக்கு யாரையும் தாக்குவதற்கு உரிமை இல்லை. 

PREV
click me!

Recommended Stories

எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
Tamil News Live today 21 December 2025: 20 மாதங்களில் 2 லட்சம் விற்பனையான ஸ்கூட்டர்.. இந்திய சாலைகளில் வலம் வருது.. எது தெரியுமா?