
விரைவு ரயிலில் இருந்து இளைஞரை தள்ளிவிட்டு கொன்ற திருநங்கை தற்கொலை முயற்சி செய்துள்ளது. விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற திருப்பத்தூரைச் சேர்ந்த திருநங்கை ஸ்வேதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரயிலில் திருநங்கைகள்,பயணியிடம் காசு கேட்டு பெறுவது வழக்கமான ஒன்று தான்.
சில பயணிகள் காசு கொடுப்பார்கள்,சில பயணிகள் காசு தர மாட்டார்கள். அவர்களிடம் சுமூகமாக நடந்துகொள்ளும் திருநங்கைகளும் உள்ளனர். அடாவடியாக பேசி, இரண்டு அடி கொடுத்து காசு பறிக்கும் திருநங்கைகளும் உள்ளனர்.
இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த சத்தியநாராயணா.இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் காட்பாடி மார்க்கத்தில் ரயில் ஏறி உள்ளார்.
அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி என்ற ஊரை ரயில் கடக்கும் போது, பயணி சத்திய நாராயணாவிடம் திருநங்கைகள் காசு கேட்டுள்ளனர். அதற்கு அவர் தர மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் ஓடும் ரயிலிலிருந்து வெளியே தள்ளிவிட்டதில் சத்தியநாராயணா பரிதாபமாக உயிரிழந்தார். சத்யாநாராயணாவை காப்பாற்ற முற்பட்ட அவருடைய நண்பர்களும் காயம் அடைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், விரைவு ரயிலில் இருந்து இளைஞரை தள்ளிவிட்டு கொன்ற திருநங்கை தற்கொலை முயற்சி செய்துள்ளது. விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற திருப்பத்தூரைச் சேர்ந்த திருநங்கை ஸ்வேதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.