அரசுப் பேருந்துகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை... போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!!

By Narendran SFirst Published Nov 24, 2022, 12:21 AM IST
Highlights

ரூபாய் 10 மற்றும் 20 நாணயங்களை வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுப் பேருந்து நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ரூபாய் 10 மற்றும் 20 நாணயங்களை வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுப் பேருந்து நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக ரிசர்வ் வங்கி மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நாணையங்கள் செல்லாது என நினைத்து மக்கள் அந்த நாணயங்களை வாங்கவும் பயன்படுத்தவும் மறுக்கின்றனர். இதே நிலை தமிழகங்கத்தின் ஏராளமான பகுதிகளில் இருந்து வருகிறது.

இதையும் படிங்க: வட்டி தள்ளுபடியுடன் கடன் வசதி பெறும் திட்டம்... பயன்பெறுவது எப்படி? வேளாண்மை உழவர் நலத்துறை விளக்கம்!!

ஒருசில பகுதிகளில் இந்த நாணயங்கள் செல்லாது என்ற வதந்தியும் பரவியுள்ளது. இதனால் மக்கள் அதனை கொடுத்தால் கூட வியாபாரிகள் முதல் பேருந்து வரை அனைத்து தரப்பும் வாங்க மறுப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அரசு பேருந்துகளில் பயணச் சீட்டு வாங்க 10, 20 ரூபாய் நாணயங்களை பொதுமக்கள் வழங்கினால் அதை வாங்க மறுப்பதாக பேருந்து நடத்துநர்கள் மீது புகார் எழுந்தது.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்… சிபிஐ அதிரடி நடவடிக்கை!!

இதை அடுத்து 10, 20 ரூபாய் நாணயங்களை மறுக்காமல் பெற்றுக்கொண்டு பயணச் சீட்டை வழங்க போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நாணயங்களை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிக்கும் நடத்துனர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எக்காரணம் கொண்டும் பயணிகள் அளிக்கும் ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான நாணயங்களை பெற்றுக்கொள்ள நடத்துனர்கள் மறுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

click me!