தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை தொடரும்.. 5 மாவட்டங்களில் மிக கன மழை எச்சரிக்கை-பாலச்சந்திரன் தகவல்

Published : Nov 03, 2023, 03:01 PM IST
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை தொடரும்.. 5 மாவட்டங்களில் மிக கன மழை எச்சரிக்கை-பாலச்சந்திரன் தகவல்

சுருக்கம்

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   

தமிழகத்தில் மழை எச்சரிக்கை

தமிழகத்தில் மழை நிலவரம் தொடர்பாக வானிலை ஆய்வை மைய தென் மண்டல் தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், தென் தமிழகத்தில் பெரும்பாலன இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதன் படி அதிகபட்சமாக  சிதம்பரத்தில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.  இந்தநிலையில் அடுத்த 3 தினங்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் வளி மண்டல சுழற்சியின் காரணமாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.

5 மாவட்டங்களில் மிக கன மழை

இதன் காரணமாக அடுத்த 3 தினங்களுக்கு பெரும்பாலன இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்தில்  கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவங்கை, தூத்துக்குடி, திருப்பூர், கோவை, நீலகிரி  உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறினார். 

வட கிழக்கு பருவ மழை குறைவு

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இடைவெளிவிட்டு மிதமான மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்யக்கூடும். வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை கடந்த அக் 1 தேதி முதல் தற்போது வரை இயல்பாக 19 செ.மீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 12 செ.மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. எனவே  40 % குறைவான அளவில் மழையானது பெய்துள்ளது என பாலசந்திரன் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

Orange Alert: மிக கனமழையால் தமிழகத்திற்கு நாளை ஆரஞ்ச் அலர்ட்..! பள்ளிகளுக்கு விடுமுறையா.? வெளியான தகவல்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!