பண்ருட்டி அருகே சாலை விபத்தில் சிக்சி மூளைச்சாவடைந்து உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே வாழப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மாயவன் (வயது 60). இவர் கடந்த திங்கள் கிழமை சாலை விபத்துக்குள்ளாகி கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி மாயவன் மூளைச்சாவு அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் உறுப்புகள் தானம் குறித்து மருத்துவமனையின் நிர்வாகம் சார்பில் குடும்பத்திற்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாயவனின் கண்கள், சிறுநீரகங்கள், இதயம் உள்ளிட்ட 5 உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தொடர்ந்து அவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மாயவன் உடலுக்கு மரியாதை செலுத்தி அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் உயிரிழந்த மாயவனின் சொந்த ஊரான நெல்லிக்குப்பம் வாழப்பட்டு கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று அவரின் இறுதிச் சடங்கில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஆகியோர் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினர்.